மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

Advertisement

Mobile Fast Charging Tips in Tamil

வணக்கம் நண்பர்களே.! அனைவரும் இதனால் டென்ஷன் ஆகுவீர்கள். அந்த பிரச்சனை காண தீர்வை தான் பார்க்க போகிறோம். அனைவருக்கும் உலகமே போன் தான். முன்னாடியெல்லாம் ரோட்டை பார்த்து நடந்தார்கள். ஆனால் இப்போது போனை பார்த்து தான் நடக்கிறார்கள். ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இருந்தால்  ஷாப்பிங், மளிகை பொருட்கள் வாங்குவது, கட்டணம் செலுத்துவது என அனைத்தையும் வீட்டிலிருந்தே செய்யலாம். போன் இருப்பதினால் இருந்த இடத்திலுருந்து வேலைகள் முடியுது. அப்படிப்பட்ட ஸ்மார்ட் போனில் சார்ஜ் வேகமாக ஏறுவது எளிமையான செயல் அல்ல. இதனால் பல பேர் டென்ஷன் ஆகுவீர்கள். வாங்க போனில் சார்ஜ் வேகமாக  ஆகுவதற்கு என்ன செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

போன் வேகமாக சார்ஜ் ஏறுவதற்கு டிப்ஸ்:

உங்கள் போனில் சார்ஜ் ஸ்லோவா ஏறுது என்றால் போனை சார்ஜ் செய்வதற்கு முன் Switch Off செய்து சார்ஜ் செய்யுங்கள். இல்லையெனில் Aeroplane Mode on செய்தும் சார்ஜ் செய்யுங்கள். இப்படி  செய்யும் போது போன்பேட்டரி  எந்த செயலையும் செய்யாது. அதனால் விரைவாக சார்ஜ் ஆகிவிடும்.

போன் சார்ஜரில் செய்ய கூடாதவை:

உங்கள் மொபைல் போன் சார்ஜரை தவிர வேற போனின் சார்ஜரை பயன்படுத்த கூடாது. அதுமட்டுமில்லாமல் கடையில் Branded இல்லாத சார்ஜரை வாங்கி பயன்படுத்த கூடாது. அப்படி நீங்கள் பயன்படுத்தும் போது சார்ஜ்  ஸ்லோவாக தான்  ஏறும்.

மொபைல் போன் சார்ஜ் ஏறும்போது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி நீங்கள் சார்ஜ் ஏறும் போது பயன்டுத்தினால் ஸ்லோவாக தான் ஏறும்.

போன் சார்ஜ் ஏறும் போது Net, Blutooth போன்ற செயலிகள் on-யில் இருக்க கூடாது. அப்படி on யில் இருக்கும் போது Notification மற்றும் Message எல்லாம் வரும். அப்படி வரும் போது  charge ஸ்லோவாக தான் ஏறும்.

அதனால் சார்ஜ் ஏறும் போது மேல் கூறப்பட்டுள்ள  தவறுகளை செய்யாதீர்கள்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement