Phone Keyboard Setting Tips in Tamil
அனைவரின் கையிலும் போன் இருக்கும் அதனால் தான் இந்த பதிவை பார்ப்பீர்கள் என்று நினைக்கிறன். அதில் இருக்கும் அனைத்தையும் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்றால் கண்டிப்பாக கிடையாது ஏனென்றால் அனைத்தையும் தெரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டம் தான். நாம் கணினி காலத்திற்கு ஏற்றது போல் இருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் நினைக்கிறேன்.
காரணம் அவ்வளவு விஷயங்கள் போன் மூலமும் தெரிந்துகொள்கிறோம். தினமும் நிறைய விஷயங்களை கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் பயன்படுத்தும் போனில் கூட அது போல் நிறைய விஷங்கள் அப்டேட் செய்து வருகிறார்கள். ஆகவே அதற்கு ஏற்றது போல் நம்மையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் போனில் Keyboard வைத்து தான் அனைத்து விஷயத்தையும் தேடுவோம் அதில் இருக்கும் சில ரகசியங்களை காண்போம் வாங்க..!
Keyboard Setting Tricks in Tamil:
டிப்ஸ்:1
- நம்முடைய keyboard நாம் பயன்படுத்தும் வாட்ஸ்சப் செயலியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்த முடியும் அது எப்படி தெரியுமா வாங்க பார்ப்போம்..!
ஸ்டேப்:1
- Whatsapp-குள் செல்லவும் அதில் 3 புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 2
- கிளிக் செய்த பின் அதில் Floating என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 3
- அதன் பின் நீங்கள் Scroll செய்து எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
டிப்ஸ்: 2
நம்மில் பலருக்கு ஒரு கையில் போன் யூஸ் செய்யும் பழக்கம் இருக்கும் அவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும்.
ஸ்டேப்: 1
- Whatsapp-குள் செல்லவும் அதில் 3 புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 2
- கிளிக் செய்த பின் அதில் ONE Handed என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 3
பின்பு மேல் உள்ள படத்தில் உள்ளது போல் வந்து விடும் ஆகவே நீங்கள் பயன்படுத்த ஈசியாக இருக்கும்.
டிப்ஸ்: 3
நாம் அனைவருமே செய்யக்கூடிய தவறு தான் நாம் யாருக்காவது பெரிதாக Type செய்வது வழக்கம் அதனை வேண்டாம் என்று மாற்றி Type செய்ய அதனை டெலிட் செய்வதுக்கு Backspace key கொடுப்போம் அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதற்கு இந்த டிப்ஸ் யூஸ் ஆகும்.
டெலிட் செய்ய போனால் backspace key யில் கை வைத்து left side நகர்த்தினால் அனைத்தும் டெலிட் ஆகும்.
அதேபோல் நிறைய Type செய்த பிறகு இடையில் ஏதாவது தவறு செய்தால் முபைல் கசரை சரியான இடத்தில் கொண்டு போய் வைப்பதற்கு Space keyயில் கைவைத்து உங்களுக்கு எந்த சைடு மாற்றவேண்டுமோ அந்த இடத்திற்கு நகற்றி தவறான சொற்களை மாற்றி கொள்ளலாம்.
You Tube, Instagram போன்ற செயலிகளில் மூழ்கி இருப்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |