Play Store App Settings in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவரின் ஸ்மார்ட் போனிலும் Play Store App கட்டாயம் இருக்கும். ஸ்மார்ட் போனில் அனைத்து ஆப்களையும் டவுன்லோட் செய்வதற்கு Play Store App கட்டாயம் தேவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல இந்த Play Store App -ல் உள்ள சில Settings -யை மாற்ற வேண்டும். அதை பற்றி இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Youtube Settings -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? |
Play Store Settings in Tamil:
Settings -1
முதலில் உங்களுடைய போனில் Play Store App உள்ளே செல்லுங்கள். பிறகு அதில் மேலே உங்களுடைய Profile இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
அதில் Manage Apps And Device என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதன் மேல் Manage என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் Installed என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Not Uninstalled என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
அதில் நீங்கள் இதுவரை Download செய்து Uninstall செய்த App எல்லாம் முழுமையாக Delete ஆகாமல் அங்கே சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் முழுமையாக Delete செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் போன் Memory மற்றும் Storage Full ஆகாமல் இருக்கும்.இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Truecaller-ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!
Settings -2
உங்கள் Play Store App -ல் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் Network Preferences என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் Auto Play Videos என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்தால் 3 ஆப்ஷன் தோன்றும். அதில் Don’t Auto Play Videos என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் Play Store App ஓபன் செய்யும் போது அதில் தானாகவே சில வீடியோ Play ஆகும். நீங்கள் Don’t Auto Play Videos என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதால் அந்த வீடியோக்கள் இனி Play ஆகாது.Settings -3
அதேபோல Play Store App -ல் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Network Preferences என்ற ஆப்சனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் அதில் Auto Update Apps என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு Don’t Auto Update Apps என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Done கொடுக்க வேண்டும்.
நீங்கள் மொபைல் டேட்டாவை ON செய்யும் போது தானாகவே சில Apps Update ஆகும். Don’t Auto Update Apps என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதால் இதுபோல Apps தானாக Update ஆகாது.எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |