Sim Card Details in Tamil
வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் Sim Card பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய காலகட்டத்தில் மக்களால் அதிகம் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஓன்று தான் மொபைல் போன். இந்த மொபைல் போன் இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது தான் சிம் கார்ட். நாம் வாங்கும் சிம் கார்டு யார் பெயரில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? நாம் பயன்படுத்தும் சிம் கார்டு யார் பெயரில் இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ உங்களுடைய Sim எந்த நம்பரில் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
Sim Card என்றால் என்ன..?
1991 ஆம் ஆண்டில் முனிச் என்ற நகரில் இயங்கும் Giesecke & Devrient என்ற நிறுவனம் தான் முதன் முதலாக சிம் கார்டை உருவாக்கியது. நாம் மற்றவர்களை தொடர்புகொள்ள இந்த சிம் கார்டு தான் உதவியாக இருக்கிறது. சிம் கார்டு இல்லை என்றால் மொபைல் போனை பயன்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.
போன் இயங்குவதற்கு கட்டாயம் சிம் கார்ட் தேவை. மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் சிம் கார்டு எப்படி இருக்கும் என்று தெரியும். SIM என்பது ஆங்கிலத்தில் Subscriber Identity Module என்ற விரிவாக்கத்தை கொண்டுள்ளது.
சிம் பொருத்தப்பட்ட மொபைல் நெட்ஒர்க் உடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் சிம் கார்டு யாருடைய பெயரில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Sim Full Form:
SUBSCRIBER IDENTITY MODULE
Sim Card யார் பெயரில் உள்ளது என தெரிந்து கொள்வது எப்படி..?
மொபைல் போனில் 2 சிம் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது என்று உங்களுக்கு தெரியும். அதுபோல நாம் பல சிம் கார்ட்கள் வாங்கி பயன்படுத்தி இருப்போம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு யார் பெயரில் உள்ளது என எப்படி தெரிந்து கொள்வது. அதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக பார்ப்போம்.
Step -1
முதலில் நீங்கள் வைத்திருக்கும் சிம் கார்டு App யை install செய்ய வேண்டும். அதாவது, உதாரணமாக நீங்கள் Jio சிம் கார்டு வைத்திருந்தால் My Jio என்ற App -யை உங்கள் போனில் Install செய்ய வேண்டும்.
Step -2
My Jio என்ற App யை கிளிக் செய்ய வேண்டும். பின் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.
பின் உங்களுடைய மொபைல் போனிற்கு ஒரு OTP எண் வரும். அதை அந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Step -3
பின் உள்ளே சென்றவுடன் மேலே ஒரு 3 கோடுகள் போன்ற அமைப்பு இருக்கும். அதை கிளிக் செய்தால் சிம் கார்டு யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |