ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..!

ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..!

தொழில்நுட்ப செய்தி (Tamil Tech News):

ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோஸ்களை கூகுள் டிரைவ்க்கு ஆட்டோமெட்டிக் அப்லோடு ஆகும் முறையை கூகுள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. கூகுள் டிரைவில் போட்டோஸ் இருக்க வேண்டுமென்றால், நாமாகத்தான் செய்ய வேண்டும்.

சரி வாங்க கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள அந்த அறிவிப்பை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.

விசிறியே இல்லாத மின்விசிறி! குறைந்த விலையில் Bladeless Fan!! (தொழில்நுட்ப செய்திகள்)

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஸ்மார்ட்போனில் போட்டோ எடுத்தவுடன், அது ஆட்டோமெட்டிக்காக நமது கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்யும் வசதி இதுவரையில் இருந்து வந்தது. ஆனால், போனில் பார்க்கும் போது மெமரியில் உள்ள போட்டோக்களும் தெரியும், கூகுள் டிரைவில் பதிவான போட்டோக்களும் தெரியும்.

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News):

இதனால், பயனாளர்களுக்கு மிகப்பெரிய குழப்பத்தை கூகுள் டிரைவ் ஏற்படுத்தி வந்தது. மேலும், போட்டோக்களை டெலிட் செய்யும் போது, சில நேரங்களில் ஒட்டு மொத்தமாக கூகுள் டிரைவ், போன் மெமரி இரண்டிலும் உள்ள போட்டோக்கள் டெலிட் ஆகுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

உங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..!

 

இந்த நிலையில், கடந்த 10ம் தேதி முதல் கூகுள் நிறுவனம், Auto Sync வசதியை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இனி ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்கள், கூகுள் டிரைவில் பதிவாகாது. ஒரு வேளை கூகுள் டிரைவிலும் பதிவு செய்ய விரும்பினால், நாமாகத்தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News):

இவ்வாறு ஆட்டோ சிங்க் வசதியை நீக்கியிருப்பதன் மூலம், இதுவரையில் பயனாளர்களுக்கு இருந்த இரண்டு போட்டோக்கள் குழப்பங்கள் இனி இருக்காது என்று கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்த்திடுங்கள்.

இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!