திருப்பதி தரிசனம் 300 டிக்கெட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி ..?

Advertisement

திருப்பதி தரிசனம் முன்பதிவு 2024  | Tirumala Darshan 300 Ticket Online Booking in Tamil

சாமிகளில் மிகவும் பணக்கார சாமி என்று சொல்லக்கூடிய கடவுள் தான் திருப்பதியில் இருக்கும் வெங்கடாஜலபதி இந்த கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் கிடைக்கும். பெரிய அளவில் கஷ்டம் இருக்காது என்று சொல்வார்கள். அதனால் மக்கள் அதிகமாக திருப்பதிக்கு வருடா வருடம் செல்வது வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதிலும் சிலர் கீழ் திருப்தியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்து செல்வார்கள். அப்படி நடந்து செல்பவர்கள் நேராக சாமியை பார்க்க அனுமதிக்கிறார்கள். சிலர் சாமியை பார்க்க 300 டிக்கெட், 1000 டிக்கெட் என்று புக்கிங் செய்து சாமியை எளிமையாக பார்க்க முடியும். அதனை நாம் கோவிலுக்கு சென்று தான் புக்கிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை வீட்டிலிருந்து கோவிலை அடைந்து எளிமையாக சாமியை பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் இது போல் ஒரு  புக்கிங் செய்யும் முறை உள்ளது என்று யாருக்குமே தெரியாது. சரி தெரியாதவர்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்..!

திருப்பதி தரிசனம் முன்பதிவு 2024:

இந்த முன் பதிவை விரைவாக பதிவு செய்வது போல் தான் இருக்கும். முக்கியமாக ஒரு போன் நம்பரை வைத்து அதிகபட்சமாக 6 பேர்க்கு மட்டும் தான் புக்கிங் செய்ய முடியும்.

முதலில் நீங்கள் எந்த ஆதாரத்தை வைத்து புக்கிங் செய்ய போகிறீர்கள் என்று முடிவு  செய்துகொள்ளவும்.

ஸ்டேப்: 1

பதிவு செய்ய tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

ஸ்டேப்: 2

 tirumala darshan 300 ticket online booking in tamil

அதன் பின் அதில் Latest update என்பதற்கு கீழ் தரிசனம் எப்போது திறக்கப்படும், எவ்வளவு விலையில் புக்கிங் என்ற விவரம் இருக்கும்.

ஸ்டேப்: 3

அதில் உங்களுக்கு என்ன தேதியில் வேண்டும் என்ன நேரத்திற்கு உங்களால் செல்ல முடியும் என்பதை முடிவு செய்து அதற்கு நேராக click here என்பதை கிளிக் செய்யவேண்டும்

ஸ்டேப்: 4

 tirumala darshan 300 ticket online booking in tamil

அதன் பின் உங்களுக்கு நேரம் காணப்படும் அது முடிந்த பிறகு புதிய திரை காணப்படும்.

ஸ்டேப்: 5

 tirumala darshan 300 ticket online booking in tamil

அதில் உங்களுடைய போன் நம்பர் கொடுக்க வேண்டும். ஒரு போன் நபரை வைத்து அதிகபட்சமாக 6 நபர்களுக்கு மட்டும் புக்கிங் செய்ய முடியும்.

ஸ்டேப்: 6

அதன் பின் உங்கள் போனிற்கு OTP வரும் அதனை உள்ளீட்ட பிறகு ஓர் புதிய திரை காணப்படும்.

ஸ்டேப்: 7

அடுத்து அதில் சில விவரங்கள் கேட்கும் அது அனைத்தையும் சரியாக உள்ளீடவும்.

ஸ்டேப்: 8

கீழ் பக்கம் Continue என்பதை கிளிக் செய்யவும். அதனை அனைத்தும் சரியாக  உள்ளதா என்பதையும் சரி பார்த்து விட்டு Pay செய்துவிடவும்.

ஸ்டேப்: 9

சிலருக்கு இது போல் பதிவும் போது Error என்று வரும் உடனே வெளியில் வரக்கூடாது Try again  என்பதை மட்டுமே கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் உங்களுக்கு புக்கிங் Confirm SMS வந்து விடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  தட்கல் டிக்கெட் என்றால் என்ன?

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 விமான டிக்கெட் அதிகமா இருக்கா குறைந்த விலையில் விமான டிக்கெட் எப்படி பெறுவது தெரிந்துகொள்வோம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement