Whatsapp Online Hide Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு அருமையான பதிவு பற்றித்தான் தெரிந்துகொள்ள போகின்றோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் ஒன்று இன்ஸ்டாகிராம், இதில் அதிகமான சிறப்பு அம்சங்கள் உள்ளன, அதாவது நாம் ஆன்லைனில் இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு தெரியாதது போல இருக்க வேண்டும் என்பதற்காக பல அம்சங்கள் அதில் உள்ளன. ஆனால் இப்போது வந்திருக்கும் Whatsapp அப்டேட்களில் இன்ஸ்டாவை விட அதிகமான சிறப்பு அம்சங்கள் வந்துள்ளன. அதில் இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது என்னவென்றால் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு காட்டாமல் இருப்பதற்கான ஒரு செட்டிங்ஸ் தான், மேலும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
Whatsapp Online Hide Settings in Tamil:
நீங்கள் முன்பெல்லாம் உங்களுடைய Whatsapp-யில் Online Last Seen யாருக்கும் காட்ட கூடாது என்று, settings privacy- யில் Nobody செய்து வைத்திருப்பீர்கள், இதனால் நீங்கள் கடைசியாக வந்த ஆன்லைன் Seen யாருக்கும் காட்டாது. ஆனால் நீங்கள் Whatsapp உபயோகிக்கும் பொழுது நீங்கள் ஆன்லைனில் இருப்பது எல்லோருக்கும் காட்டும் அல்லவா, ஆனால் இப்பொழுது அதையும் காட்டாமல் செய்யலாம், அதாவது நீங்கள் Whatsapp உபயோகிக்கும் பொழுது, நீங்கள் ஆன்லைனில் இல்லாதது போல செய்யலாம். மேலும் உங்களுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் உங்களுடைய Online Seen பார்க்கும்படி செய்யலாம். மேலும் அவற்றை எப்படி செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.
2023-ல 7 கோடி மக்களின் Whatsapp Account-ஐ Ban பண்ணிட்டாங்களாம் தெரியுமா?
ஸ்டேப்:1
முதலில் உங்களுடைய Whatsapp ஆப்பை ஓப்பன் செய்துகொள்ள வேண்டும். ஓப்பன் செய்ததும், அதில் Chats, Status, Calls என்று இருக்கும், Calls க்கு மேல் இருக்கும் அந்த மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:2
மூன்று புள்ளிகளை கிளிக் செய்ததும் அதில் New Group, New broadcast, Linked Devices, Starred Messages, Payaments, Settings என்று இருக்கும். அதில் நீங்கள் Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?
ஸ்டேப்:3
Settings என்பதை கிளிக் செய்ததும், அதில் ஒரு பேஜ் ஓப்பன் ஆகும், அதில் முதலில் இருக்கும் Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:4
Account என்பதை கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓப்பன் ஆகும், அதில் Privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:5
1. Privacy என்பதை கிளிக் செய்ததும், ஒரு பேஜ் ஓபன் ஆகும், அதில் முதலில் இருக்கும் Last Seen and Online என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்ததும், ஒரு பேஜ் ஓப்பன் ஆகும், அதில் who can see my last seen என்று இருக்கும் அதற்கு கீழ் Everyone, My Contacts Except, Nobody என்று நான்கு ஆப்ஷன்கள் இருக்கும்.
2. அதற்கு கீழ் பக்கத்தில், who can see when i’m online என்பதற்கு கீழ் Everyone, same as last seen இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்,
இதில் நீங்கள் யாருக்கும் ஆன்லைன் காட்ட கூடாது என்று நினைக்கிறீர்களோ, மேலே கொடுப்பட்டிருக்கும் வரிசை எண் ஒன்றில் இருக்கும் My Contacts Except என்பதை கிளிக் செய்ய வேண்டும், அதில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது யாருக்கும் காட்ட கூடாது என்றால், உங்கள் காண்டேக்ட்டில் உள்ளவர்களை all tick செய்ய வேண்டும். பிறகு வரிசை எண் இரண்டில் இருக்கும் same as last seen என்பதை கிளிக் செய்தால். நீங்கள் ஆன்லைனில் இருப்பது யாருக்கும் காட்டாது.
நீங்கள் ஆன்லைனில் இருப்பது ஒருவருக்கும் மட்டும் காட்ட வேண்டும் என்று நினைத்தால் , All Tick செய்த இடத்தில அவருடைய பெயரில் இருக்கும் டிக்கை மட்டும் எடுக்க வேண்டும். இப்பொழுது அவருக்கு மட்டும் நீங்கள் ஆன்லைனில் இருப்பது காட்டும்.
எனவே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் உடனே உங்களுடைய Whatsapp ஆப்பில் செய்து பாருங்கள்.
வாட்ஸ் அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |