Whatsapp நிறுவனம் 7 மில்லியன் கணக்குகளை தடை செய்துள்ளது!
நாம் எல்லாரும் பயன்படுத்தும் உடனடி செய்தி சேவையான WhatsApp ஒரு புது செய்தியை வெளியிட்டுள்ளது. WhatsApp ஒவ்வொரு மாதமும் அதன் மாதாந்திர இந்திய அறிக்கைகளை வெளியிட்டு வரும், இவை அனைத்தும் அதன் விதிகளுக்கு உட்பட்டவை. கடந்த 2023 அறிக்கையின் படி Whatsapp நிறுவனமானது நிறைய இந்திய மக்களின் Whatsapp Account-ஐ தடை செய்துள்ளது. அந்த கணக்குக்களை பார்த்தால் நீங்களே வியந்து விடுவீர்கள், ஏனென்றால், அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வாட்சப்பிலும் நிறைய சிக்கல்கள் இருக்கு, அதில் மாட்டிக்கொள்பவர்களின் அக்கௌன்ட் தடை செய்யப்படுகிறது.
கடந்த நவம்பர் 2023-ல், மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தி சேவையான WhatsApp, 7.1 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளைத் தடைசெய்துள்ளது. நவம்பர் 1 மற்றும் நவம்பர் 30 க்கு இடையில், 7,196,000 கணக்குகள் தடைசெய்யப்பட்டதாக வாட்ஸ்அப் வெளிப்படுத்தியது, இது ஜனவரி 1 அன்று வெளியிடப்பட்டது. இந்த பதிவை முழுவதுமாக பார்த்து மாத வாரியாக தடை செய்யப்பட்ட கணக்கின் விவரத்தை பார்ப்போம்.
தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்க
ஜனவரி 1, 2024 நிலவரப்படி, புதிய அறிக்கையை மெசேஜிங் தளம் வழங்கியது, இதில் நவம்பர் 30 வரையிலான கணக்குகள் மட்டுமே உள்ளது, December 2023 மாதத்திற்கான தடை செய்யப்பட்ட கணக்கின் விவரம் அடுத்த மாதம் வெளியப்படும்.
Month | Banned Accounts |
1 JANUARY – 31 JANUARY 2023 | 2,918,000 |
1 February – 28 February 2023 | 4,597,400 |
1 March – 31 March 2023 | 4,715,906 |
1 April – 30 April 2023 | 7,452,500 |
1 May – 31 May 2023 | 6,508,000 |
1 June – 30 June 2023 | 6,611,700 |
1 July – 31 July 2023 | 7,228,000 |
1 August – 31 August 2023 | 7,420,748 |
1 September – 30 September 2023 | 71,11,000 |
1 October – 31 October 2023 | 7,548,000 |
1 November – 30 November 2023 | 7,196,000 |
கடந்த ஆண்டு ஜனவரி முதல், Whatsapp ஒவ்வொரு மாதமும் எவ்ளோ கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் மேலே காணலாம்.
நீங்க Whatsapp Web யூஸ் பண்றீங்களா அப்போ இத கொஞ்சம் பாருங்க!
WhatsApp Banned due to Abuse Detection
மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், WhatsApp நிறுவனம் 79,000 புகார்களைப் பெற்றுள்ளது அது ஏனென்றால் கணக்கு ஆதரவு, தடை முறையீடுகள், பிற ஆதரவு, தயாரிப்பு ஆதரவு மற்றும் பாதுகாப்பு.
இதனையடுத்து 2,398 கணக்குகளை அகற்றத் தொடங்கியது.
Reason for Whatsapp Account Banned
Whatsapp Account-ஐ Ban பண்ண கரணம், நெட்வொர்க்கில் அதன் பயனர்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக, வாட்ஸ்அப் பல காரணங்களுக்காக கணக்குகளைத் தடைசெய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது, அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தேவையில்லாத செய்திகளை பகிர்தல்.
- ஸ்பேமிங்
- பிற பயனர்களால் அடிக்கடி புகாரளிக்கப்படுவதால்.
- அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகள் அல்லது மாற்றங்களைப் பயன்படுத்துதால்.
இது போல சில காரணங்களால் Whatsapp நிறுவனம் நிறைய accounts-ஐ block செய்துள்ளது.
வாட்ஸ் அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |