வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: November 6, 2022 7:19 AM
Follow Us:
WhatsApp vs Telegram Features in Tamil
---Advertisement---
Advertisement

WhatsApp vs Telegram Features in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. உடனடி செய்திச் சேவை தளங்களில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp மிகப் பிரபலமான செயலி என்று சொல்லலாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் WhatsApp பயனர்கள் என்பது அனைவரும் அறிந்தஒரு விஷயம் தான். ஆனால் அதன் பின்னர் அறிமுகமான Telegram செயலியும் WhatsApp-ற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பது போல் WhatsApp-ற்கு போட்டியாக பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கும் விஷயம் எஎன்னவென்றால். WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.  அதனை படித்துவிட்டு WhatsApp vs Telegram இதில் எது சிறந்தது என்று நீங்களே கூறுங்கள் நண்பர்களே.

No: 1

Telegram-யில் உங்களுக்கு நண்பருக்கு மெசேஜ் அனுப்புறிங்கனு வைத்துக்கொள்வோம். அந்த மெசேஜை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால். கண்டிப்பாக அந்த்ய மெசேஜை திருத்தம் செய்ய முடியும்.

அதற்கு நீங்கள் அந்த மெசேஜை Long Press செய்து மேல Edit option ஆகும் அதனை கிளிக் செய்தீர்கள் என்றால் நீங்கள் Edit செய்ய விரும்பிய மெசேஜை Edit செய்துகொள்ள முடியும். இந்த Option-னை ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியும். மீண்டும் அந்த மெசேஜை திருத்தம் செய்ய முடியாது.

No: 2

உங்கள் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அல்லது எதாவது ஒரு வாழ்த்துக்களை Telegram மூலம் தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இருப்பினும் சரியான நேரத்திற்கு உங்களால் வாழ்த்து மெசேஜை அனுப்ப முடியாத சூள்நிலை அல்லது நீங்கள் மருந்துவிடுவீர்கள் என்றால். அதற்கும் ஒரு அருமையான வழி இருக்கிறது. அது என்ன என்றால் நீங்கள் அனுப்ப இருக்கும் மெசேச்ஜை நீங்கள் Scheduled செய்து கொள்ளலாம். அதாவது நீங்கள் என்ன எந்த நாளில், எந்த  நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நேரத்திற்கு முன் கூட்டியே செடியில் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் சென்ட் பட்டனை Long Press செய்யவும். இப்பொழுது உங்களுக்கு Scheduled option வரும் அதனை கிளிக் செய்து நீங்கள் Scheduled செய்து கொள்ளலாம்.

No: 3

நீங்கள் ஒருவருக்கும் மெசேஜ் அனுப்பும் பொது ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் Hide செய்து மெசேஜ் அனுப்ப முடியும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் Hide செய்து அனுப்பிய வார்த்தையை அவர்கள் கிளிக் செய்து பார்த்தால் மட்டுமே. அது என்ன வார்த்தை என்று அவர்களுக்கு தெரியும். இதை நீங்கள் எப்படி செய்யலாம் என்றால் Telegram-யில் உங்கள் நண்பர்கள் யாருக்காவது மெசேஜ் அனுப்பும்போது நீங்கள் Hide செய்ய விரும்பும் வார்த்தையை மட்டும் Select செய்து கொள்ளுங்கள் பிறகு Spoiler என்ற option-னை தேர்வு செய்தீர்கள் என்றால் அந்த வார்த்தை மட்டும் Hide ஆகி இருக்கும்.

டெலெக்ராமில் இப்படி பலவகையான Option-னை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது அன்று நினைக்கும் போது WhatsApp-ஐ விட Telegram அதிகமான வசதிகளை மக்களுக்கு வழங்குகிறது என்று சொல்லலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now