Youtube App யூஸ் பண்றீங்களா ..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Youtube App in Tamil

ஹலோ நண்பர்களே..! நாம் அனைவருமே Smart Phone பயன்படுத்தி வருகிறோம். அப்படி நாம் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களில் Youtube இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது, மக்களால் அதிகளவு பார்க்கப்படும் சமூக வலைத்தளம் Youtube என்று சொல்லலாம்.

அதுபோல இந்த Youtube ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அது எப்படி உருவானது..? அதன் வரலாறு என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று நாம் Youtube ஆப் பற்றிய தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..!

முகத்தை காட்டாமல் Youtube சேனல் மூலம் மாதம் ₹ 50000 to 1 லட்சம் சம்பாதிக்கலாம்!.

Youtube App Information in Tamil:

Youtube App Information in Tamil

YouTube என்பது கலிபோர்னியா நாட்டின் San Bruno என்பதை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக ஊடக தளம் என்று சொல்லப்படுகிறது.

இந்த  YouTube ஆப் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஸ்டீவ் சென் , சாட் ஹர்லி மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இவர்கள்  மூன்று பேரும் பேபால் என்ற நிறுவனத்தில் ஆரம்பகால ஊழியர்களாக இருந்தவர்கள்.

இந்த Youtube ஆப்பை Google -க்கு சொந்தமான ஆப் என்று கூறப்படுகிறது. Google தேடலுக்குப் பிறகு, மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது வலைத்தளமாக YouTube செயல்பட்டு வருகிறது. 

Youtube Settings -ல இவ்வளவு விஷயம் இருக்கா..?

 

 அக்டோபர் 2006 ஆம் ஆண்டு Youtube அதன் முதல் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட போது Google நிறுவனமானது அதை $1.65 பில்லியன் மதிப்பிற்கு வாங்கியது.  

அதன் பிறகு Youtube -ன் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் Google நிறுவனமானது YouTube இல் உள்ள வீடியோ வகைகளில் இசை வீடியோக்கள், வீடியோ கிளிப்புகள், செய்திகள், குறும்படங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், ஆடியோ பதிவுகள், திரைப்பட டிரெய்லர்கள், டீசர்கள், லைவ் ஸ்ட்ரீம்கள், Vlog-கள் மற்றும் பல சேவைகளை உருவாக்கியது.

Google நிறுவனமானது இதை வாங்கிய பிறகு ஒரு சிறிய காணொளியாக இருந்த  Youtube -ஐ பிரபலமான கலாச்சாரம், இணைய போக்குகள் மற்றும் பல மில்லியனர் பிரபலங்களை உருவாக்கும் ஒரு சமூக ஊடகமாக மாற்றியது.

English-யில் உள்ள YouTube வீடியோவை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது எப்படி தெரியுமா?

 

Youtube ஒரு அதிகாரபூர்வ நிறுவனமாக 2020 ஆம் ஆண்டில் $19.8 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. அதனால் இது Google ஆப்பிற்கு பிறகு உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தளமாக கருதப்படுகிறது. இந்த Youtube ஆப்பில் 1 பில்லியனுக்கும் அதிகமான மாதப் பயனர்கள் உள்ளனர்.

இது நவீன இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும், பல பயனர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாறியுள்ளது. அதுபோல இது பில்லியன் கணக்கான மணிநேர உள்ளடக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கியக் குழுக்களுடன் Youtube ஒரு பெரிய சமூகத் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல Youtube ஆப்பில் இதுவரை தரவிறக்கம் (Downlode) செய்யும் வசதி வழங்கப்படவில்லை. ஆனால், இனி வரும் காலகட்டங்களில் Youtube நிறுவனம் தரவிறக்கம் செய்யும் வசதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலக அளவில் அதிகமாக Subscribers கொண்ட Youtube சேனல்ஸ்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement