ஏற்றுமதி தொழிலுக்கான DOCUMENTS என்ன தேவை?

Advertisement

Export Business (ஏற்றுமதி தொழில்) செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் (Export Document):

ஏற்றுமதி தொழில் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் (Export Document) என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

நீங்கள் ஒரு Proprietor அல்லது Partner அல்லது Director என்ற நிலைகளில் தாங்கள் இருந்தால் முதலில் நீங்கள் IE கோட் பதிவு செய்ய வேண்டும். இந்த IE கோட் பதிவு செய்வதற்கு கண்டிப்பாக பான் கார்ட் தேவைப்படும்.

தாங்கள் ஒரு proprietor இருந்தால் proprietor பான் கார்ட் வைத்திருக்க வேண்டும்.

partner இருந்தால் கம்பெனி பான் கார்ட் மற்றும் கம்பெனியில் உள்ள மற்ற partner-யுடைய பான் கார்ட் வேண்டும்.

அதேபோல் தனியார் நிறுவனம் அல்லது OBEC ஆக இருந்தால் கம்பெனி பான் கார்ட் மற்றும் அந்த கம்பெனியில் உள்ள director -களின் பான் கார்ட் வேண்டும். மற்றபடி ஆதார் கார்ட் வைத்திருந்தால் போதும்.

வங்கியில் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க காரணம் என்ன ?

Rental Agreement:

அதை தவிர கம்பெனிக்கு தனியாக rental agreement வைத்திருக்க வேண்டும். இந்த rental agreement எதற்காக வைத்திருக்க வேண்டும் என்றால், கம்பெனி தங்களுடையது, தாங்கள் தான் இந்த நிறுவனத்தை வைத்து நடத்துகின்றனர் என்பதற்காக இந்த rental agreement முக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

Current Account Checklist:

மேலும் current account checklist வைத்திருக்க வேண்டும். அதற்கு வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். வங்கியில் கணக்கு வைப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள். பான் கார்ட், ஆதார் கார்ட், தங்களுடைய புகைப்படம், GST மற்றும் MSME வைத்திருக்க வேண்டும். சில வங்கியில் MSME கேப்பார்கள் சில வங்கியில் MSME கேட்கமாட்டார்கள். ஆனால் GST கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

GST பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னவென்றால் பான் கார்ட், ஆதார் கார்ட், தங்களுடைய புகைப்படம் மற்றும் தங்களுடைய கம்பெனி முகவரிகள் ஆகியவற்றை வைத்து இந்த GST சான்றிதழை பதிவு செய்ய வேண்டும்.

பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்

இந்த GST வைத்துதான் வங்கியில் current account அப்ளை செய்ய வேண்டும். current account அப்ளை செய்யத்தவுடன் இந்த current account வைத்து IE கார்ட் அப்ளை செய்ய வேண்டும்.

பின்பு இந்த IE கார்ட் வைத்து கொண்டு RCMC சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். இந்த RCMC சான்றிதழ் எதற்காக என்றால் இந்த சான்றிதழை வைத்து கொண்டு தான் cancel membership member ஆக முடியும்.

RCMC Certificate:

இந்த RCMC சான்றிதழ் பதிவு செய்தபிறகு ஓரளவு தங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களான அதாவது ப்ரைமரி டாக்குமெண்ட்ஸ் என்று சொல்லுவாங்க அந்த அனைத்து ஆவணங்களும் (Export Document) தங்கள் கையில் இருக்கும்.

ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி

Bank Certificate:

இந்த ஆவணங்களுடன் bank certificate என்று சொல்லுவாங்க அந்த ஆவணங்களையும் வாங்கி வைத்து கொள்வது மிகவும் நல்லது bank account அல்லது bank certificate என்று தனியாக வங்கிக்குள் தருவாங்க. இந்த சான்றிதழை தங்களுடைய பெயரில் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

ISO Certificate:

அதன் பிறகு ISO certificate வைத்துக்கொள்வது மிகவும் நல்லது, இந்த ISO certificate-க்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இந்த சான்றிதழ் தங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கி கொள்ளலாம். இல்லையெனில் அவசியமில்லை. இருந்தாலும் ISO certificate வைத்துக்கொண்டால் தங்களது கம்பெனிக்கு தனி சிறப்பு உண்டு.

Fssai Certificate:

தாங்கள் உணவு சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதாக (Export Document ) இருந்தால் fssai certificate கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

Authorised Dealer Certificate:

Authorised dealer certificate இந்த சான்றிதழ் வாங்கி தங்களுக்கு தரும் இந்த Authorised dealer code வைத்து கொண்டுதான் customer office-யில் தங்கள் வைத்திருக்கும் பொருட்களை விற்பனை செய்ய முடியும். எனவே கண்டிப்பாக இந்த AD CODE கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

அவ்வளவுதான் இந்த ஆவணங்கள் அனைத்தும் வைத்திருந்தாலே போதும் ஏற்றுமதி தொழில் (Export Document) செய்வதற்க்கு போதுமான ஆவணங்கள் ஆகும்.

IE கோட் பொறுத்தவரை ஏற்றுமதி தொழில் (Export Document) செய்வதாக இருந்தாலும் சரி அல்லது இறக்குமதி தொழில் செய்தாலும் சரி இரண்டுக்கும் ஒரே IE கோட் பயன்படுத்தி கொள்ளலாம்.

உங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும் – உசார்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement