புதிய paywave card நன்மை மற்றும் தீமை:
paywave card என்னும் புதிய வகை ATM card தற்போது நம் நாட்டிலும் அறிமுகம் செய்ய உள்ளன. இந்த புதிய வகை ATM card பற்றிய நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இப்போது நாம் காண்போம்.
இந்த புதிய அம்சமான paywave card, password இல்லாமலே நம்மால் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் ATM card பொறுத்தவரை நாம் password கொடுத்தால் தான் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆனால் இப்போது புதிதாக அறிமுகம் செய்ய உள்ள paywave card மிகவும் எளிதாக பாஸ் வேர்ட் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால் அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய wifi அம்சம் தான் இந்த பணம் பரிபாற்றத்திற்கு முதல் காரணம்.
புதிய paywave ATM card பயன்கள்:
இந்த புதிய paywave ATM கார்டில் wifi அம்சம் பொறுத்தப்பட்டிருப்பதினால் மிக எளிதில் 2000/- வரை பணபரிமாற்றங்கள் செய்து கொள்ள முடியும்.
சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் ATM கார்டில் ஒவ்வொரு முறை பணம் பரிமாற்றத்திற்கு கார்டை ஸ்வைப் செய்வதற்கு பதிலாக, எளிதாக இந்த புதிய வகை paywave card-யில் card reader பயன்படுத்தி மிக எளிதாக பணம் பரிமாற்றங்களை செய்து கொள்ள முடியும்.
வங்கியில் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க காரணம் என்ன ?
paywave card தீமைகள்:
என்ன தான் இந்த கார்டில் நாம் எளிதாக பணம் பரிமாற்றங்கள் செய்து கொண்டாலும் இந்த கார்டில் wifi பொறுத்தப்பட்டிருப்பதால் card reader பயன்படுத்தி நான்கு செண்டிமீட்டர் தூரத்திலே நமக்கு தெரியாமல் பணம் பரிமாற்றம் செய்யும் ஆபத்து இருக்கிறது.
இந்த புதிய ATM card மக்களுக்கு பயனுள்ளதா என்பது ஒரு கேள்விக்குறிதான், ஆனால் வங்கி மற்றும் இந்த கார்டை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நல்ல பயனளிக்கிறது.
அதாவது நாம் இந்த புதிய ATM கார்டை பயன்படுத்திக்கின்றோம் என்றால் சாதாரணமாக நாம் எங்காவது வெளியே செல்கிறோம் என்றால், அப்போது யாராவது card radar வைத்துள்ளனர் என்றால், அதுவும் நான்கு செமீ தூரத்தில் இருந்தாலும் மிக எளிதில் நம் வங்கி கணக்கில், இருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் நமக்கு தெரியாமலே செய்யப்பட்டுவிடும்.
அதேபோல் இந்த புதிய ATM CARD காணமல் போய் விட்டது என்றால் மிகவும் சுலபமாக ஒரு 15 முறையாவது அவர்கள் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமாம்.
எனவே இந்த புதிய ATM கார்டு பயன்படுத்துபவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த புதிய ATM கார்டு பயன்படுத்துபவர்கள் தினமும் செல்போனில் SMS அறிவிப்பை தவறாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதிக கூட்டங்கள் நிறைந்த பகுதிகளுக்கு இந்த புதிய ATM கார்டை எடுத்து செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
பணம் பரிமாற்றம் நமக்கு தெரியாமலே நிகழப்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன், அதிர்ச்சி அடைய தேவையில்லை. உடனே தங்களது வங்கி கிளைகளுக்கு சென்று, அலுவலர்களிடம் அறிவித்து விடவும்.
நம்மை அறியாமல் நிகழும் இந்த பணம் பரிமாற்றத்தை தவிர்த்துக்கொள்ள, இந்த கார்டுக்கென்றே பர்ஸ் விற்கப்படுகிறது. அந்த பர்ஸை பயன்படுத்திக்கொண்டாலும் இந்த பணம் பரிமாற்றத்தை தவிர்த்து கொள்ள முடியும்.
எப்படி புதிய SBI ATM DEBIT Card ஆன்லைனில் அப்ளை பண்ணுவது..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.