ஆன்லைன் மூலம் புதிய டெபிட் கார்டை எப்படி அப்ளை செய்வது எப்படி.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆன்லைன் மூலம் புதிய டெபிட் கார்டை எப்படி அப்ளை செய்வது எப்படி.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. EMV Chip பொருத்தப்பட்ட debit card-ஐ எப்படி ஆன்லைனில் அப்ளை செய்யவேண்டும் என்பதை பற்றி தான் இப்போது நாம் பார்க்கபோகிறோம். இந்த EMV Chip பொருத்தப்பட்ட debit card-ஐ இரண்டு முறையாக அப்ளை பண்ண முடியும். ஒன்று ஆஃப்லைன் முறை, மற்றொன்று ஆன்லைன் முறை.
ஆஃப்லைன் முறை:
ஆஃப்லைன் முறை அப்ளை பண்ண வேண்டும் என்றால் தங்களது வங்கி கிளைக்கு நேரடியாக சென்று, அப்பிளிக்கேஷன் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து அப்ளை பண்ணவேண்டியதாக இருக்கும்.
ஆன்லைன் முறை:
ஆன்லைன் முறை, நெட் பேங்க் மூலம் அப்ளை செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளை பற்றி இப்போது நாம் காண்போம்.
சாதாரணமாக ஆன்லைனில் ATM அப்ளை பண்ணுவது போலத்தான் அப்ளை செய்ய வேண்டும்.
1 முதலில் யூசர் நேம், மற்றும் பாஸ்வேட் டைப் செய்து லாகின் செய்ய வேண்டும்.
2 அதன் பிறகு யூசர் நேம் மற்றும் பாஸ்வேட் கொடுத்த பிறகு அவற்றில் ஹோம் பேச் திறக்கப்படும். அவற்றில் E-Services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3 அதன் பிறகு அவற்றில் ATM Card – services என்பதை செலக்ட் பண்ணவேண்டும்.
4 இப்போது அவற்றில் ஒரு சில ஆப்ஷன்கள் காணப்படும். அதாவது black ATM Card, ATM Card limit, ATM Card pin Generation, New ATM Card Activation மற்றும் Request ATM / Debit card என்று சில ஆப்ஷன்கள் காணப்படும்.
அவற்றில் Request ATM / Debit card என்பதை கிளிக் செய்யவும்.
5. Request ATM / Debit card என்பதை கிளிக் செய்தவுடன், அவற்றில் அக்கவுண்ட் நம்பர், வங்கி கிளை பெயர் என்று சில தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன் பிறகு அவற்றில் name on the card என்பதில் தங்களது பெயரை டைப் செய்யுங்கள்.
பின்பு அதன் கீழ் இருக்கும் select type of the card என்பதில் தங்களுக்கு பிடித்த type of the card-ஐ select செய்யவும்.
அதாவது தங்களுக்கு master card, visa card, rupay card என்ற பலவிதமான card இருக்கும் அவற்றில் தங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.
6. பின்பு I accept என்பதை கிளிக் செய்து, பிறகு submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
7. submit பொத்தானை கிளிக் செய்தவுடன் திரையில் தங்களது அக்கவுண்ட் நம்பர், பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை காட்டும், அவற்றை ஒருமுறை சரி பார்த்து கொள்ளுங்கள்.
8.சரி பார்த்த பின்பு submit என்பதை கிளிக் செய்யுங்க.
8.அவ்வளவுதான் புதிய EMV Chip debit card அப்ளை செய்துவிட்டோம்.
9.இந்த புதிய EMV Chip debit card அப்ளை செய்த 7 அல்லது 10 நாட்களில் நமக்கு கிடைத்து விடும்.
10.அதேபோல் ஆன்லைன் மூலம் pin generation-யும் மாற்றி கொள்ளலாம்.
11.புதிய EMV Chip debit card வந்தவுடன் நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பழைய ATM கார்டை பிளாக் செய்து விடுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |