PF பணம் பெறுவது எப்படி? | PF Withdrawal Online Tamil
PF Withdrawal Online:- இந்தியாவில் பெரும்பாலான பெரிய நிறுவனங்களில் PF (Provident Fund) எனும் சலுகை ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஊழியர்களிடம் PF (Provident Fund) மூலம் பெறப்படும் தொகையுடன் மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் ஊழியர்கள் பணியை விட்டு செல்லும் போது அந்த தொகையை எடுத்துக்கொள்ளலாம். இதற்கான மொத்த வழிமுறைகளும் மத்திய உழைப்பாளர் மற்றும் ஊதிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..! |
தொழிலாளர்கள் விரும்பும் போது இதனை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இந்த PF (Provident Fund) தேவைப்படாத பட்சத்தில் ஒய்வு பெற்ற பின்பும் எடுத்து கொள்ள முடியும்.
அதுவும் யுனிஃபைடு மெம்பர் போர்டல் வலைதளம் மூலம் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பது மிகவும் எளிய முறையாகும்.
எனவே தொழிலாளர்கள் குழப்பத்தை போக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஃபார்ம் 19, பார்ம் 10சி மற்றும் ஃபார்ம் 31 போன்றவற்றை ஒருங்கிணைத்து இருக்கிறது.
சரி வாங்க பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) பகுதியில் இன்று நாம் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிக்கும் வழிமுறையை தொடர்ந்து பார்ப்போம்.
ஏற்றுமதி தொழிலுக்கான DOCUMENTS என்ன தேவை ? |
உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் – PF Balance Check Number – 7738299899:-
SMS மூலம் வைப்பு நிதி தொகையை தெரிந்து கொள்ள:
உங்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகையை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணில் முதலில் மொழியினை தேர்வு செய்ய வேண்டும். இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகள் உள்ளது. எனவே இவற்றில் தங்களுக்கு தெரிந்த மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின் EPFO அதன் பதிவுகளில் கிடைக்கும் உறுப்பினர்களின் விவரங்களையும் அனுப்புகிறது. எனவே உங்கள் UAN எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் தங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
PF Balance Check Number | 7738299899 |
மிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம் – pf balance check number by missed call:-
நீங்கள் யுஏஎன் நம்பரினை பதிவு செய்திருந்தால், 011-22901406 என்ற எண்ணிற்க்கு, உங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் UAN எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு எந்த செலவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
PF Balance Check Number By Missed Call | 011-22901406 |
சரி இப்பொழுது PF Withdrawal Online மூலம் எப்படி பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
PF Withdrawal Online Apply?
முன் கூட்டியே கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
இவ்வாறு செய்யும் முன் உங்களிடம் ஆக்டிவேட் செய்யப்பட்ட யு.ஏ.என். நம்பர் மற்றும் EPFO வலைதளத்தில் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
யு.ஏ.என். நம்பர் மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாங்-இன் செய்ய வேண்டும்.
ஒருவேளை யு.ஏ.என். நம்பர் தங்களிடம் இல்லாத பட்சத்தில் ஆக்டிவேட் யு.ஏ.என். எனும் பட்டனை க்ளிக் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் யு.ஏ.என். நம்பர் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரம் ஆகும்.
லாங்-இன் செய்த பிறகு:
லாங்-இன் செய்ததும் பக்கத்தில் பயனர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
அதில் Online Services ஆப்ஷனை க்ளிக் செய்து மெனு பாரில் இருக்கும் Claim ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இனி வங்கி அக்கவுண்ட் நம்பரின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவு செய்து, Verify பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
வெரிஃபை ஆனதும், கீழ்புறம் ஸ்கிரால் செய்து Proceed to Online Claim ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் ஸ்கிரால் செய்து பட்டியலில் இருந்து Only PF withdrawal form ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆதார் ஒ.டி.பி. மூலம் கோரிக்கையை உறுதி செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பூர்த்தி செய்த பின் பயனர்கள் யு.ஏ.என். வலைதளத்தில் தங்களது கோரிக்கை நிலவரத்தை Online Services ஆப்ஷனில் Check Claim Status பட்டனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
PF Withdrawal Online – முக்கிய குறிப்பு:
ஒருவேளை உங்களது நிறுவனம் தொழிலாளர் வைப்பு நிதியை ஏதேனும் டிரஸ்ட் உடன் நிர்வகித்து வந்தால், பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையை சமர்பிக்க முடியாது.
ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information In Tamil |