பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தலைவலி வருகிறதா..! இதற்கு மாத்திரை எடுத்தால் குழந்தையை பாதிக்குமா..!

Advertisement

கர்ப்ப காலத்தில் தலைவலி

இன்றைய பதிவில் கர்ப்ப காலத்தில் தலைவலி எதனால் ஏற்படுகிறது. அதனை எப்படி தடுப்பது மற்றும் கர்ப்ப காலத்தில் வரும் தலைவலியினால் மாத்திரை எடுப்பதால் குழந்தையை பாதிக்குமா என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம். தலைவலி பொதுவாக டென்ஷன், மன அழுத்தம் என்று பல காரணங்களால் தலைவலி ஏற்படும். அதற்கு தைலம் அல்லது தலைவலி மாத்திரை எடுத்துக்கொள்வோம். தலைவலி மாத்திரை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. உடலுக்கு தீங்கை விளைவிக்கும். அதிலும் கர்ப்பமாக இருப்பவர்கள் தலைவலிக்கு மாத்திரை எடுத்து கொள்வதனால் குழந்தையை பாதிக்குமா தெரிந்துகொள்வோம் வாங்க..

தலைவலி எதனால் வருகிறது:

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தலைவலி வருவது மன அழுத்தத்தினால் தலைவலி வருகிறது. தலைவலியை இரு வகைகளாக பிரிக்கலாம். பிரைமரி, செகண்டரி என இரண்டாகப் பிரிக்கலாம்.

கர்ப்பம் அடைவதற்கு முன்பே ஒரு பெண்ணுக்கு மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

 கர்ப்பிணி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் தலைவலி ஏற்படும். இதற்கு  ப்ரீஎக்ளாம்சியா’ என்று பெயர். உயர் ரத்த அழுத்தம் இருந்து தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.  

கர்ப்ப காலம் உயர் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் ப்ரீஎக்ளாம்சியா என்ற  வலிப்பு பிரச்சனை ஏற்படும்.  இதனால் குறைமாதப் பிரசவம், நஞ்சு பிரிவது, குழந்தைக்கு ரத்த ஓட்டம் செல்லாதது என பலபிரச்சனைகள் ஏற்படும்.

சைனஸ் பிரச்சனை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், போன்ற பிரச்சனைகளால் தலைவலி ஏற்படும்.  எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளை பெறுவது அவசியமானதாகும். 

கர்ப்ப காலத்தில் வரும் தலைவலியை எப்படி தடுப்பது.?

கர்ப்ப காலத்தில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நீர்சத்து குறைபாட்டினால் தலைவலித்தால் தண்ணீர் அதிகமாக குடித்து வந்தால் நல்ல பலனை தரும்.

நிம்மதியான தூக்கம் கர்ப்ப காலத்தில் அவசியமான ஒன்றாகும். அதனால் தலைவலி வரும் போதெல்லாம் ஓய்வு எடுங்கள். நன்றாக தூங்கினால் தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தலைவலி பிரச்சனை இருந்தால் வெதுவெதுப்பான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து தலையில் ஒத்து கொடுத்தால் தலைவலி குறையும்.

கர்ப்ப காலத்தில் கீரை சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement