கருப்பை பிரச்சனைகள்
பொதுவாக பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனை கருப்பை பிரச்சனைகள். இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்டால் பலரும் பல விதமாக சொல்கின்றனர். முன்னோர்களிடம் கேட்டால் நாட்டு மருந்து சொல்வார்கள். மருத்துவரிடம் சென்றால் மாத்திரை, மருந்து எழுதி கொடுப்பார்கள். மருந்துகளை தொடர்ந்து எடுக்க முடியாது அல்லவா.! அதற்கு என்ன செய்வது சத்தான பழங்கள் சாப்பிடலாம். அது என்னென்ன பழங்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் ⇒ கருப்பையை சுத்தப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?
கருப்பையில் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது:
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும்.
பெண்களுக்கு மாதவிடாய் முடிவு காலம் தோரயமாக 51 வயது.. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அதாவது உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்சனை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.
கருப்பை பிரச்சனையை சரி படுத்தும் அல்லது பலப்படுத்தும் பழங்கள்:
கருப்பை பிரச்சனை வந்த பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதை விட வருவதற்கு முன்னரே அதை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள். அதற்கான பழங்களை தெரிந்துகொள்வோம்.
செவ்வாழை பழம்:
பழங்களில் உயர்ந்த பழமாக செவ்வாழை பழம் கருதப்படுகிறது. செவ்வாழையில் கால்சியம் சத்து, பொட்டாசியம், வைட்டமின் B6 சத்து போன்றவை உள்ளது. தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது. இதனால் நாளாக இருந்த உதிரப்போக்கு மற்றும் கருப்பை பிரச்சனைகளில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும்.
கொய்யா பழம்:
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யா பழமாக எடுத்து கொள்ள கூடாது. கொய்யா காய்களாக இருக்கும் அல்லவா அந்த பழங்களை பகலில் தினமும் எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் கருப்பையில் ஏற்படுகின்ற உதிர போக்கு பிரச்சனையை சரி செய்கிறது.
அத்தி பழம்:
அத்தி பழத்தில் இருக்கும் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள பழமாகும். அத்திப்பழம் சாப்பிடும் போது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து , அதிக அளவு ரத்த உற்பத்தி செய்து ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. இந்த பழத்தை தினமும் எடுத்து கொண்டால் கருப்பை பலப்படும்.
மேல் கூறப்பட்டுள்ள பழங்களை கருப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.! கருப்பையை பலமாக இருப்பதற்கும் இந்த பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பழங்களை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |