தமிழ் அரசி பெயர்கள் | Sangakala Tamil Pengal Peyargal
வணக்கம் நண்பர்களே இன்றைய பெயர்கள் பதிவில் சங்ககாலத்தில் உள்ள தமிழ் பெண் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளலாம். சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். சங்க காலத்தில் பெண் புலவர்களும் சரி, ஆண் புலவர்களும் சரி, நிறைய பேர் வாழ்ந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. நாம் இந்த பதிவில் சங்ககால தமிழ் பெண் பெயர்களையும் அதற்கு அர்த்தத்தினையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
சங்ககால பெண் பெயர்கள்:
சங்ககால பெண் பெயர்கள் |
அதன் அர்த்தம் |
மாரிகா |
மழையின் சோலை |
கமழினி |
மணம் நிறைந்தவள் |
சிற்பிகா |
சிற்பிகளின் சோலை |
கயன்னங்கை (கயல் + நங்கை = கயன்னங்கை) |
கடற்கண்ணி என்றுப் பொருள் |
மென்பனி |
மென்மையான பனியைப் போன்றவள். |
நகுநா |
சிரிக்கும் நெற்கதிர் என்று பொருள் |
அருளாசினி |
தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள். |
மீயாழ் |
மேன்மையான யாழ். |
சினமிகா (சினம் + மிகா = சினமிகா) |
சினம் அறியாதவள் |
மிகலவள் |
பெருமை நிறைந்தவள் |
நுவலி |
பேச்சுக்கு அரசி. |
கமழி |
நறுமணம் நிறைந்தவள். |
யாழ்மீட்டோள் |
யாழை மீட்டுபவள். |
மெல்விண்யாழி |
மெல்லிய விண்ணை முகில் [மேகம்] சேர்ந்த யாழி, யாழி என்றால் யாழை ஏந்திருப்பவள் என்று பொருள். |
பூவிதழ் |
பூவைப் போன்று இதழ்கள் உடையவள். |
மிஞிலி |
சங்கக் காலத்தில் வாழ்ந்த முல்லை நிலத்தை சேர்ந்த பெண். |
மெல்லினி |
மென்மையும் இனிமையும் நிறைந்தவள். |
துமி |
சிறிய மழைத்துளி. |
அனலிக்கா |
சூரியனிடத்திலிருந்துத் தோன்றிய சோலைவனத்தைப் போன்றவள். |
மேகா |
அழகிய சோலையைப் போன்றவள். |
விண்கா |
விண்ணில் தோன்றியச் சோலையைப் போன்றவள். |
பனிமுகில் |
பனியை தூறும் முகிலைப் போன்றவள். |
எழிலோவியா |
அழகிய ஓவியம் போன்றவள். |
கவிநள் |
கவிதைகளின் தலைவி. |
அவிரோள் |
பேரோளியானவள் |
கவினோள் |
பேரழகி |
அலர்விழி |
மலர்களைப் போன்று கண்கள் உடையவள். |
இமையரசி |
அழகிய இமைகள் உடையவள். |
கயற்கண்ணி |
மீனைப் போன்று அழகானவள். |
இதழினி |
இனிமையான இதழ்கள் உடையவள். |
இயல் |
இயல்பானவள்; அழகானவள். |
யாழ்மொழி |
மீட்டும் யாழ் கருவியிலிருந்து வரும் இசையைப் போன்றவள். |
முகிலினி |
மேகத்தைப் போன்றவள். |
தமிழ்விழி |
தமிழைப் போன்று அழகிய கண்கள் உடையவள். |
மாயோள் |
நீல நிற உடல் உடையவள். |
மயிலோள் |
மயிலைப் போன்றவள். |
மென்னிலா |
மென்மையான நிலவுப் போன்றவள். |
ஆர்கலி |
ஆர்பறிக்கும் கடல் என்று பொருள்படும். |
பூங்குழலி |
பூவைப் போன்று கூந்தல் உடையவள். |
ஆரலி |
நிலவைப் போன்றவள். |
மழல் |
இளமையானவள்; மென்மையானவள். |
அகமேந்தி |
அன்பை(காதல்) தாங்கியிருப்பவள். |
நறுவீ |
நறுமணம் வீசும் மலரைப் போன்றவள். |
நன்விழி |
பேரழகான கண்களை உடையவள். |
நிலவள் |
நிலவை போன்றவள். |
செழிலி |
இனிமையானவள் |
அல்லி |
மலரின் பெயர். |
நீரள் |
மென்மையானவள் |
எயினி |
பாலை நிலத்தின் தலைவி. |
எழிலி |
மழை முகில் போன்றவள். |