அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Aceclofenac and Paracetamol Tablet Uses in Tamil..!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. நாம் இப்போது எல்லாம் நம் உடலில் ஏற்படும் சாதாரண விஷயத்திற்கு கூட அதிகளவு மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். இருப்பினும் அந்த பிரச்சனை குணமானாலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த பதிவில் அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

நீங்கள் அசிக்லோஃபெனாக் (Aceclofenac)-ஐ எடுத்துக்கொள்ளும் முன், வேறு ஏதேனும் அழற்சி எதிர்ப்பு வலி நீக்கி மருந்திற்கு, ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால். உங்களுடைய மருத்துவரிடம் கூறவும். காலையில் ஒரு மாத்திரை மற்றும் மாலையில் ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளவும். உணவை உட்கொள்ளும் போது அல்லது சிற்றுண்டிற்குப் பிறகு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும்.

அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை பயன்கள் – Aceclofenac and Paracetamol Tablet Uses in Tamil:

இந்த அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை மூட்டு வலிம், காய்ச்சல், பல்வலி, குளிர், தலைவலி, காது வலி, Cephalalgia, முடக்கு வாதம், மாதவிடாய் நேரங்களில் வலி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பக்க விளைவுகள் – Aceclofenac and Paracetamol Tablet Side Effects in Tamil:

இந்த அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தலைச்சுற்று, செரிமானமின்மை, முக வீக்கம், அயர்வு, வயிற்று வலி, ஒவ்வாமை எதிர்வினைகள், தடிப்பு, நோய் உணர்வு, எக்ஸிமா, தலைவலி, சிறுநீர்தானாகக்கழிதல், ஒவ்வாமை, குமட்டல், ராஷ் தோல் சிவந்து போதல், மூச்சு திணறல், கல்லீரல் சேதம், இரத்த அணுக்கள் இயல்பு, கல்லீரல் நச்சுதன்மை, குறைவான வெள்ளை இரத்த அணுக்கள், தீவிரமான சிறுநீரகச் குழாய் நசிவு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, மயக்க உணர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்பட கூடும்.

முன்னெச்சரிக்கைகள்:

இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம்.

சினரெஸ்ட் மாத்திரை பயன்கள்
அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள்
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement