ஆஸ்பிரின் மாத்திரை நன்மைகள் மற்றும் தீமைகள் | Aspirin Tablet Uses in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆஸ்பிரின் மாத்திரை பற்றி தெரிந்துகொள்ளலாம். நம் உடல் நிலையை சீராக வைத்து கொள்வதற்கும், உடல் பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கும் மருந்து அல்லது மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். எந்த மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனை எவ்வளவு முக்கியமோ அதே போன்று நாம் பயன்படுத்தும் மருந்து பற்றிய பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் ஆஸ்பிரின் மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Ivermectin மாத்திரை பயன்கள் |
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் – Aspirin Tablet Uses in Tamil:
- காய்ச்சல், உடம்பு வலி, தசை வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- மாரடைப்பு, முடக்கு வாதம் மற்றும் பக்கவாதங்களை சரிசெய்யவும், மேலும் இந்த நோய் தீவிரம் அடையாமல் இருக்கவும் உதவுகிறது.
- இதய நோய், தலைவலி, ஒற்றை தலைவலி, மைக்ரேன், Cephalalgia, Febrility, வாத காய்ச்சல் போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.
- குழந்தைகளின் வாய், தோல் மற்றும் நிணநீர் மண்டலங்களை தாக்கும் கவாசாகி நோயை குணப்படுத்த உதவுகிறது.
ஆஸ்பிரின் மாத்திரை பக்க விளைவுகள் – Aspirin Tablet Side Effects in Tamil:
- மூச்சு திணறல், தலை சுற்றல், வாந்தி, மயக்கம், செரிமான கோளாறு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- இரைப்பை அரிப்பு, இரைப்பை புண், இரைப்பை அழற்சி, நீர்க்கட்டு, நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- வெர்டிகோ, ஹெபடைடிஸ், ஹெபாடோமெகலி, Urticaria, சுவாச குழாய் பிரச்சனைகள், மூளை ரத்த கசிவு, நாசியழற்சி, ரத்த போக்கு, உணவுக்குழாய் ரத்தம் வடிதல் போன்ற பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
- மேற் கூறப்பட்ட பக்க விளைவுகள் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலோ உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவரை அணுக வேண்டும்.
ஆஸ்பிரின் மாத்திரை யாரெல்லாம் சாப்பிட கூடாது:
- கீழ் வாதம், சிறுநீரக நோய், டெங்கு காய்ச்சல், ரெயேவின் நோய்க்குறி, ஹைப்பர்யூரிகேமியா மற்றும் குழந்தைகள் இந்த மாத்திரையை பயன்படுத்த கூடாது.
- கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கிட்னி கோளாறு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை சில பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம் ஆதலால் ஆஸ்பிரின் மாத்திரை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
- கல்லிரல் மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
மருந்தளவு:
- 75MG, 150MG, 500MG, 50MG, 300MG
லெத்ரோஸ் பயன்பாடுகள் & அதன் பக்க விளைவுகள் |
புளுக்கோனசோல் மாத்திரை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |