Atarax 25 mg Tablet Uses in Tamil
மனிதர்கள் மட்டுமில்லை ஆடு, மாடு போன்றவற்றிற்கும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் மாத்திரை தான் பயன்படுத்துகின்றனர். பிரச்சனைக்கான தீர்வாக மட்டும் தான் மாத்திரை பயன்படுகிறது என்று நினைக்கின்றனர். அந்த மாத்திரையே நம் உடலுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதனால் ஒவ்வொரு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Atarax 25 mg Tablet Uses:
அட்ராக்ஸ் 25 மில்லி கிராம் மாத்திரை ஒவ்வாமையை எதிர்க்கும் பண்பை கொண்டுள்ளது. இந்த மாத்திரை சொறி, தோல் சிவந்த நிறத்தில் இருத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இது ஹிஸ்டமைன் எனப்படும் இரசாயன பொருளின் செயல்பாட்டை தடுத்து ஒவ்வாமை பிரச்சனையிலுருந்து தீர்வு அளிக்கிறது.
கவலை:
பதற்றம் என்பது அதிகப்படியான பயம் அல்லது கவலையால் ஏற்படுகிறது. அதனால் அட்ராக்ஸ் 25 மில்லி கிராம் மாத்திரை பதற்ற நிலைக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
தோல் ஒவ்வாமை:
அரிப்பு, சொறி, தோலின் நிறம் சிவந்து காணப்படுதல், படை நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அறுவை சிகிச்சை:
அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னும் பின்னும் மயக்க மருந்தாகவும், தூக்கத்தை தூண்டுவதற்காகவும் பயன்படுகிறது.
ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
Atarax 25 mg Tablet Side Effects:
- தலைசுற்றல்
- இருமல்
- குமட்டல்
- மலசிக்கல்
- தலைவலி
- வாய் வறட்சி
- மங்கலான பார்வை
- உடல் சோர்வு
முன்னெச்சரிக்கை:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொது இந்த மாத்திரையை சாப்பிடுவதை மருத்துவர் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் கருவுக்கு தீங்கு ஏற்படும்.
நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலும் இந்த மாத்திரை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்றியிருக்க வேண்டும்.
இந்த மாத்திரை இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகப்படுத்தும். அதனால் இதய பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் மற்றும் மயக்க நிலை ஏற்படும். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் வயதானவர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்வதற்கு முன் நீங்கள் வேறு எந்த பிரச்சனைக்காவது மாத்திரை எடுத்து கொண்டால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறியுள்ள அளவை மட்டும் தான் சாப்பிட வேண்டும். ஒரு வேலை நீங்கள் மாத்திரை சாப்பிடுவதை மறந்து விட்டால் அடுத்த முறை அதை சரிபடுத்துவதற்காக இரண்டு மாத்திரை சாப்பிட கூடாது.
Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம் வாங்க..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |