Bandy Plus Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள சுற்று சூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வாக உள்ள மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பொழுது நமக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றால் அதனை சரி செய்வதற்காக நாம் மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்தினை வாங்கி பயன்படுத்துகின்றோம் என்றாலும் நாம் பயன்படுத்தும் மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்திருப்பது மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு மருந்து பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Bandy Plus மாத்திரையை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Bandy Plus Tablet Uses in Tamil:
இந்த Bandy Plus மாத்திரை ஆன்டெல்மிண்டிக் எனப்படும் மருந்துகளின் குழுவின் கீழ் வருகிறது. இது தலை பேன்கள், குடல் புழுக்களை மற்றும் சிரங்கு ஆகியவற்றிற்கு திறம்பட சிகிச்சையளிக்கிறது.
மேலும் இந்த Bandy Plus மாத்திரை குடலில் உள்ள வளர்ந்து வரும் புழுக்களை கொள்வதன் மூலம் உடலில் செயல்படுகிறது, ஆனால் வளர்ந்தவைகளை கொள்வதில்லை.
இந்த மருந்து வாய் வழியாக எடுத்து கொள்ளக்கூடிய கரைசல் அல்லது மாத்திரை வடிவத்திலும் கிடைக்கிறது.
Bandy Plus Tablet Side Effects in Tamil:
- மலச்சிக்கல்
- வயிற்றுப்போக்கு
- தோல் அரிப்பு
- வாந்தி
- பலவீனம்
- மயக்கம்
- தொண்டை வலி
- வயிற்று வலி
- தலைவலி
- மார்பு வலி
Bandy Plus மாத்திரையை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Metformin 500 mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
அதிலும் குறிப்பாக நீங்கள் கற்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தாலும் இந்த Bandy Plus மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஆஸ்துமா அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் இந்த Bandy Plus மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Gutrex D 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |