காலமைன் தோல் லோஷன் நன்மைகள் & பக்க விளைவுகள் | Calamine Lotion Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே நமது உடல் நலத்திற்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் நாம் உடனை கைவைத்தியம் செய்வோம் அல்லது மருத்துவரை அணுகுவோம். ஆனால் பெரும்பாலான மக்கள் ஏதேனும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வந்து விட்டால் மருத்துவரை அணுகாமல் கடைகளில் விற்கக்கூடிய லோஷன்களை தான் முதலில் நாம் பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் போது அந்த லோஷன்கள் ஒவ்வொரு சருமத்திற்கும் மாறுபட்டு காணப்படும்.
அந்தவகையில் நாம் நமது பிரச்னைக்கு ஏற்ற லோஷன்களை தேர்த்தெடுப்பது முக்கியம். எந்த ஒரு மருந்தையோ அல்லது கிரீம் வகைகளையோ பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும் சூழல் ஏற்படும் பொழுது அந்த லோஷன் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வது அவசியம். அந்த வகையில் சந்தையில் கிடைக்க கூடிய காலமைன் லோஷன் பற்றிய அடிப்படை தகவல்களை அதாவது காலமைன் லோஷன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக்கொள்ளலாம்..
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள் |
காலமைன் லோஷன் பயன்கள்:
இந்த காலமைன் லோஷனை:
- எக்ஸிமா
- பொடுகு தொல்லைக்கு
- உலர்ந்த அல்லது சீரற்ற தோல்
- தோல் சமபந்தமான தொற்று நோய்கள்
- தோல்களில் எரிச்சல் போன்ற உணர்வு
- குழந்தைகளுக்கு டயாபர் போடுவதால் தடித்து போதல்
- நமைச்சல் பிரச்சனை
- தோல்களில் வலி ஏற்படுதல்
- நாள்பட்ட கை தோல் அலர்ஜி
- அரிப்பு பிரச்சனை
- தோல்களில் ஏற்படும் தொற்று பிரச்சனை
போன்ற தோல் சமபந்தமான பிரச்சனைகளுக்கு காலமைன் லோஷன் பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- எந்த ஒரு மாத்திரையில் அதிகமான அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு அதன் பக்க விளைவுகளும் நிறைந்திருக்கிறது.
- காலமைன் லோஷனை பெரும்பாலும் அதிக அளவில் சருமத்தில் உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் இந்த காலமைன் சருமத்தை வறட்சியாக்கும் அதுமட்டும் அல்லாமல் அதிகம் பயன்படுத்தும் எரிச்சலை உண்டாக்கும். இதனை சருமத்தில் அதிக அளவில் பயன்படுத்தும் மேலும் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ராணிடிடைன் மாத்திரை பயன்கள் |
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் |
விலை:
அனைத்து மருந்து கடைகளிலும் இந்த லோஷன் ரூ. 30 விலையில் ஈசியாக கிடைக்கிறது.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது:
பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் அலர்ஜி பிரச்சனை இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பயன்படுத்துவது எப்படி.?
இந்த லோஷனை பயன்படுத்துவதற்கு முன் குளித்து விட வேண்டும். பிறகு பாதிக்கப்பட்ட பகுதியில் லோஷனை பெதுவாக தடவ வேண்டும்.
மருத்துவர் கூறிய அளவில் தான் இந்த லோஷனை பயன்படுத்த வேண்டும்.
Calapure லோஷன் எப்படி வேலை செய்கிறது:
Calapure லோஷன் என்பது தடிமனான மாய்ஸ்சரைசரை உருவாக்க, கலமைன், அலோ வேரா மற்றும் லைட் லிக்விட் பாரஃபின் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சருமத்தை மென்மையாக்கும் மற்றும் சருமத்தைப் பாதுகாக்கும் மாய்ஸ்சரைசர். Calapure லோஷன் ஒரு கிருமி நாசினியாகவும் மற்றும் அரிப்புக்கு எதிராக செயல்படும் மருந்து ஆகும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |