சிட்ரல்கா சிரப் பயன்பாடுகள் | Citralka Syrup Uses in Tamil

Citralka Syrup Uses in Tamil

சிட்ரல்கா சிரப் பயன்பாடு மற்றும் பக்க விளைவு | Citralka Syrup Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே உடலில் லேசான தலைவலி இருந்தால் கூட நம் முதலில் எடுத்துக்கொள்வது மருந்து மாத்திரையை தான். அதிலும் அதிகமாக சளி, இருமல் தொந்தரவு இருந்தால் அதற்கான சிரப் போன்றவை எடுத்துக்கொள்ளுவோம். உடலுக்கு தொந்தரவு தரக்கூடிய எந்த ஒரு மாத்திரையாக இருந்தாலும் சரி, சிரப் என்றாலும் சரி ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டப்பிறகு எடுத்துக்கொண்டால் நல்லது. பின்விளைவுகள் எதையும் சந்திக்க வாய்ப்பு இருக்காது. இந்த பதிவில் சிட்ரல்கா சிரப் பற்றிய பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..

செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses in Tamil 

 

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

சிட்ரல்கா சிரப் பயன்பாடுகள்:

 1. சிறுநீர் பாதை நோய் தொற்று சிகிச்சைக்கு பயன்படுகிறது 
 2. எரியும் சிறுநீர்கழிவு சிகிச்சை
 3. சிறுநீரக கற்கள் சிகிச்சை
 4. சிறுநீர் பாதையில் நோய் தொற்று பிரச்சனைக்கு சிட்ரல்கா சிரப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
 5. யூரிக் அமிலகற்களை அகற்ற 
 6. சிறுநீர் alkalinisation
 7. வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு பயன்படுகிறது 
 8. சிறுநீரக குழாய் அமிலத்தேக்க சிகிச்சை
 9. Sulphonamide சிகிச்சை துணையூக்கி சிகிச்சை
 10. சிறுநீர் குடல் நோய்த்தொற்றுகள்

போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த சிட்ரல்கா சிரப் பயன்படுகிறது.

சிட்ரல்கா சிரப் பக்க விளைவுகள்:

ஒரு மாத்திரையோ அல்லது சிரப் வகைகளோ நன்மை ஒன்று இருந்தால் கண்டிப்பாக பக்க விளைவுகளும் இடம் பெற்றிருக்கும். எந்த ஒரு மருந்தினையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் சில தீவிர பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சிட்ரல்கா சிரப் பக்க விளைவுகளானது:

 1. அடிக்கடி வாய்வு பிரச்சனை 
 2. உணவுக் கால்வாய்க்குரிய இடத்தில் புண் ஏற்படுதல் 
 3. சிறுநீர்ப் பெருக்கு
 4. கிளர்ச்சி
 5. வயிற்று தசை பிடிப்புகள்
 6. மனதில் அதிக கவலை
 7. இரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைந்து காணப்படுதல் 
 8. விடாது வயிற்றுப்போக்கு
 9. உடல் சோர்வு, மனநிலை ஊசலாட்டம்

மேல் கூறியவற்றில் உங்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

சிட்ரல்கா சிரப்:

 1. இந்த சிட்ரல்கா சிரப்பானது வீரிய உப்புகளால் தயாரிக்கப்பட்டது.
 2. சிட்ரல்கா சிரப் 100 ml அளவில் கிடைக்கிறது.
 3. பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட அதிகமாக எந்த மருந்தினையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சிட்ரல்கா சிரப் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்:

முதலில் அளவு கோப்பையில் அதை அளவிட்டுக்கொள்ளவும். பயன்படுத்துவதற்கு முன்னால் நன்றாக சிரப்பினை குலுக்கவும். Citralka Liquid -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம். ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.

மேலும் விவரங்கள்:

 1. வாகன ஓட்டிகளுக்கு இந்த சிரப் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
 2. சிறுநீரக, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிவிட்டு எடுத்துக்கொள்வது நல்லது.
 3. பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரை அணுகிவிடு அதன் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.
 4. கர்ப்பிணி பெண்கள் மருத்துவரை அணுகிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil