எல்டோபர் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Eldoper Tablet Uses and Side Effects in Tamil

Advertisement

Eldoper Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் தேடுவது மாத்திரை தான். இந்த மாத்திரையை சாப்பிவதற்கு முன்னால் மாத்திரையில் இருக்கும் நன்மைகள், தீமைகள் பற்றி யாரும் தெரிந்து கொள்வதில்லை. இக்காலத்தில் எதன் மூலம் நோய் வருகிறது என்பதே தெரிவதில்லை.

சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவே நமக்கு தீங்காக விளைகிறது. எனவே, எது உட்கொண்டாலும் அதனுடைய பயன்கள் என்ன.? இதனை சாப்பிட்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா.? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கும் உதவும் வகையில் இந்த பதிவில் எல்டோபர் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக  பயன்படுத்த கூடாது.

Eldoper Tablet Uses and Side Effects:

Eldoper Tablet Uses in Tamil:

eldoper tablet uses in tamil

எல்டோபர் மாத்திரை குடல் செயல்பாட்டை மெதுவாக செய்து வயிற்று போக்கை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும் போது உடலில் நீர்ச்சத்து குறையும். அதனால் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

  1. வயிற்றுப்போக்கு 
  2. தொற்று வயிற்றுப்போக்கு 
  3. லூஸ் மோஷன்

Eldoper Tablet Side Effects:

மருத்துவரிடம் நீங்கள் பயன்படுத்தும் எல்லா மாத்திரை, மருந்துகளையும் பற்றி  சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த மாத்திரையினால் சில பக்க விளைவுகள் ஏற்படும். அது என்னென்ன பக்க விளைவுகள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. மலசிக்கல் 
  2. தலைவலி 
  3. வயிற்றுவலி 
  4. தூக்கம் வருவது 
  5. செரிமான பிரச்சனை 
  6. அடிவயிற்று வலி 
  7. குமட்டல், வாந்தி 
  8. மயக்கம் 

இதையும் படியுங்கள்  வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்.!

முன்னெச்சரிக்கை:

  • இந்த மாத்திரை சாப்பிடுவதனால் தலைசுற்றல் ஏற்படும். அதனால் இந்த மாத்திரை உட்கொள்ளும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • மது அருந்துவதை தவிர்க்கவும். ஏனென்றால், இந்த மருந்து உட்கொள்ளும் போது சாதாரணமாக தூக்கம் வரும். மது அருந்தினால் மேலும் தூக்கத்தை அதிகப்படுத்தும்.
  • மலம் கழிக்கும் போது இரத்தம் வந்தாலோ அல்லது மலசிக்கல் ஏற்பட்டலோ இந்த மருந்தை தவிர்க்க வேண்டும்.
  • மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இதையும் படியுங்கள் ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement