Glimepiride Tablet Uses in Tamil | Glimepiride மாத்திரை பயன்படுத்துகிறது

Advertisement

கிளிமிபிரைட் மாத்திரை பற்றிய தகவல் – Glimepiride Tablet Uses Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. கிளிமிபிரைட் மாத்திரை எந்த நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிளிமிபிரைட் மாத்திரையின் பயன்பாடுகள் என்னென்ன, இந்த மாத்திரையை எடுத்து கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் பக்க விளைவுகள் என்ன?, இந்த கிளிமிபிரைடு மாத்திரையை பயன்படுத்தும் முறை, யாரெல்லாம் இந்த கிளிமிபிரைடு டேப்லெட் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது மற்றும் மாத்திரையன் அளவு போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோமா?

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

கிளிமிபிரைட் மாத்திரை பற்றிய தகவல் – Glimepiride Tablet

க்ளிமெபிரைட் (Glimepiride) வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்படும் மருந்து, உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த மருந்து உணவு மற்றும் உடற்பயிற்சியின் நேர்மறை விளைவுகளை இரத்தச் சர்க்கரையை பொறுத்து அதிகரிக்க பயன்படுகிறது.

இந்த கிளிமேபிரிதே மாத்திரை பொதுவாக உயர் இரத்த சர்க்கரை (High Blood Sugar) நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த கிளிமிபிரைட் மாத்திரையில் இரண்டு மாறுபாடுகள் உள்ளது (Variant) அவை Glyburide, Glucotrol.

கிளிமேபிரிதே மாத்திரையின் வேலை:

  • உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பது ஆகும்.

Glimepiride Tablet Uses in Tamil:

  • இந்த மாத்திரையின் மற்றொரு பெயர் Amaryl இந்த மாத்திரை மருந்தகங்களில் 1mg, 2mg, 4mg  அளவில் கிடைக்கின்றது.
  • இந்த Glimepiride Tablet-ஐ பொதுவாக டைப் 2 சர்க்கரை நோய்க்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
  • குறிப்பாக இந்த மாத்திரையை டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை.

யாரெல்லாம் இந்த மாத்திரையை பயன்படுத்த கூடாது:

  • கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக்கூடாது.
  • பாலூட்டும் தாய்மார்களும் இந்த மாத்திரையை பயன்படுத்தக்கூடாது.

மாத்திரை அளவு:

  • உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க இந்த மாத்திரையை ஒரு நாளிற்கு 8mg-க்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது.

கிளிமிபிரைட் பயன்கள்:

  • இரத்த குளுக்கோஸைக் குறைப்பதற்காக கணையத்தினால் வெளியிடப்படும் இன்சுலின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்த பயன்படுகிறது.
  • இந்த கிளிமிபிரைட் மாத்திரையை பயன்படுத்தி உடலில் இன்சுலின் அளவை நிலையாக வைத்திருப்பதினால் கிட்னி பாதிப்படைவது குறைக்கப்படுகிறது.
  • இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் வருவதையும் தடுக்கிறது.

கிளிமேபிரிதே பக்க விளைவுகள் – Glimepiride Tablet Side Effects in Tamil:

  • வயிற்று கோளாறு
  • அடர்ந்த நிறத்தில் சிறுநீர்
  • இருமல்
  • தலைவலி
  • குமட்டல்
  • தலைசுற்றல்
  • வயிற்று போக்கு
  • பலவீனமான கல்லீரல் செயல்பாடு
  • மூட்டு வலி
  • தலை வலி
  • மூக்கு ஒழுகுதல்
  • வாந்தி
  • சுவாசிப்பதில் சிரமம்

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement