ஐவர்மெக்டின் பயன்பாடு | Ivermectin Tablet Uses in Tamil
ஹாய் நண்பர்களே.! இன்றைய பதிவில் ஐவர்மெக்டின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துகொள்வோம். நம் உடலில் எந்த பிரச்சனை செய்தாலும் நாம் செய்வது மெடிக்களில் மாத்திரை வாங்கி போடுவோம் இல்லையென்றால் மருத்துவரிடம் நமக்கு என்ன செய்கின்றதோ சொல்லுவோம். அதற்கு தகுந்தது போல் மாத்திரை எழுதுவார். நாம் அந்த மாத்திரையை சாப்பிடுவோம். ஆனால் அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் அதனால் என்ன பக்க விளைவுகள் இருக்கின்றது என்று பார்ப்பதில்லை. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் அதனால் நமக்கு என்ன விளைவுகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பயனுள்ள வகையில் Ivermectin மாத்திரையின் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க…
இதையும் படியுங்கள் ⇒ ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள்
Ivermectin மாத்திரை பயன்கள்:
ஐவர்மெக்டின் மாத்திரை நம் உடலில் இருக்கும் ஒட்டுண்ணி நோய்களை அழிக்க பயன்படுகிறது. ஒட்டுண்ணி நோயான தலையில் இருக்கும் பேன், சிரங்கு மற்றும் குடலில் இருக்கும் புழுக்களை அழிக்க பயன்படுகிறது.
குறிப்பு: மருத்துவர் அறிவுரை இல்லாமல் எந்த மருந்துகளையும் தானாக சாப்பிட கூடாது.
Ivermectin மாத்திரையின் பக்க விளைவுகள்:
- தலைவலி
- பசி ஏற்படாமல் இருக்கும்
- வயிற்று வலி
- காய்ச்சல்
- மயக்கம்
- இதய துடிப்பு அதிகமாக துடிப்பது
- தசையில் வலி ஏற்படுதல்
- முகம், பாதம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும்.
- தோல்களில் வெடித்த நிலையில் இருக்கும்.
- வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.
இந்த பிரச்சனை அனைவருக்கும் வருமா என்றால் இல்லை அனைவருக்கும் வராது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தது.
Ivermectin மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாதவர்கள்:
- உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மருத்துவர் அறிவுரை இல்லாமல் இந்த மாத்திரை சாப்பிட கூடாது.
- நீங்கள் தாய்மை அடைந்திருந்தால் அல்லது தாய் பால் கொடுப்பவராக இருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரை சாப்பிட கூடாது.
- உங்களது உடல் ஒன்றுக்கு மேற்பட்ட ஒட்டுண்ணி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரை சாப்பிட கூடாது.
- உங்களுக்கு ஆஸ்துமா அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
- நீங்கள் மது குடிக்கும் பழக்கம் இருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரை சாப்பிட கூடாது.
இதையும் படியுங்கள் ⇒ காம்பிஃப்லாம் மாத்திரை பயன்பாடுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |