Laricef o 200 mg Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அப்படிப்பட்ட மாத்திரையை மெடிக்களில் உங்களுக்கு என்ன செய்கிறதோ அதை மட்டும் சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. மேலும் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டாலும் அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம், அதனின் பக்க விளைவுகள் என்ன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். எல்லாரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். நீங்கள் Google சென்று நீங்கள் மாத்திரையின் பெயரை Type செய்து search செய்தாலே அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் laricef o 200 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Laricef o 200 mg Tablet Uses:
laricef o 200mg மாத்திரை காது, மூக்கு, தொண்டை ,சைனஸில் ஏதும் பாக்ட்ரியா தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் மருந்தாக கொடுக்கப்படுகிறது. மேலும் சிறுநீர் தொற்றுக்கும் இந்த மாத்திரை மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Laricef o 200 mg Tablet Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- வயிற்று வலி
- வயிற்று போக்கு
- அஜீரணம்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
முன்னெச்சரிக்கை:
கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த இந்த மாத்திரை எடுத்து கொள்வது தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அபோது வங்கம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் மது அருந்த கூடாது. இந்த மாத்திரை மட்டுமில்லை அன்டிபையோடிக் மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்த கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்து கொண்டால் அந்த மாத்திரை பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலை நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து விட்டால் அதனை சரிபடுத்துவதற்கு இரண்டு மாத்திரைகளாக எடுத்து கொள்ள கூடாது.
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |