Norflox 400 mg Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரையை மருத்துவரிடம் காண்பித்து மருத்துவர் எழுதி கொடுத்த மாத்திரையாக இருந்தாலும் அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம், அதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்து மாத்திரை சாப்பிட வேண்டும். இன்னொன்று முக்கியமானது என்னவென்றால் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் தானாகவே மருந்து கடையில் என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது.
உங்களுக்கு உதவும் வகையில் நம் வலைத்தளத்தில் நிறையை மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் நார்ஃப்ளாக்ஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Norflox Tablet Uses in Tamil:
நார்ஃப்ளாக்ஸ் மாத்திரை பாக்ட்ரியாக்களின் தொற்றுக்களை சரி செய்யும் மருந்தாக பயன்படுகிறது.
- சிறுநீர் குழாய் தொற்று
- வயிறு தொற்று
- டைபாய்டு காய்ச்சல் தொற்று
- புரோஸ்டேட் நோய் தொற்று
இதையும் படியுங்கள் ⇒ அஸ்கார்பிக் அமிலம் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!
பக்க விளைவுகள்:
- மலசிக்கல்
- மயக்கம்
- முதுகுவலி
- வயிற்றுப்போக்கு
- உடல் சோர்வு
- தலைவலி
- வயிற்றுவலி
- நெஞ்செரிச்சல்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் மாத்திரை எடுக்கும் போது ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரை உட்கொண்டால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது அதேபோல அதிக நேரம் வெயிலில் நின்று வேலை பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிடும் போது 2 மணி நேரத்திற்கு முன்பு அல்லது மாத்திரை சாப்பிட்ட 1 மணி நேரத்திற்கு பிறகு பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் மருத்துவரிடம் வேற எந்த பிரச்சனைக்காவது மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ ஒகாசெட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |