ஸ்பாஸ்மோனில் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Spasmonil Tablet Use in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய மருந்து பகுதியில் ஸ்பாஸ்மோனில் மாத்திரை எதற்காக பயன்படுகிறது என்பதை பார்க்கலாம். நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு பெரும்பாலும் அனைவரும் ஆங்கில மருந்து அல்லது நாட்டு மருந்து எடுத்து கொள்கிறோம். எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் அதை பற்றிய பொதுவான விசயங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் ஸ்பாஸ்மோனில் எந்த நோயை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
ஸ்பாஸ்மோனில் மாத்திரை பயன்கள் – Spasmonil Tablet Uses in Tamil
- Spasmonil Tablet Uses Tamil: இந்த மாத்திரை வலிகளை குணப்படுத்த உதவுகிறது. குடல் நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் எரிச்சலை சரி செய்ய உதவுகிறது.
- மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை, அடி வயிற்று வலி, சாதாரண வயிற்று வலியை குணமாக்குகிறது.
- தலை வலி, வயதானவர்களுக்கு மூட்டில் ஏற்படும் வலி போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.
- காய்ச்சல், பல் வலி, காது வலி, குளிர் காலத்தில் ஏற்படும் நடுக்கம் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.
ஸ்பாஸ்மோனில் மாத்திரை பக்க விளைவுகள் – Spasmonil Tablet Side Effects in Tamil:
- என்னதான் இந்த மாத்திரை சில நோய்களை குணப்படுத்தினாலும், ஒரு சில பக்க விளைவுகளையும் ஸ்பாஸ்மோனில் மாத்திரை கொண்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- மங்கலான பார்வை, அழற்சி, தோல் சிவந்து போவது, தோல் வீக்கம், அரிப்பு, மனநிலையில் மாற்றம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தலாம்.
- வாய் வறண்டு போதல், கல்லீரலில் வீக்கம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உபயோகப்படுத்த வேண்டாம்.
- இது போன்ற பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலோ உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Spasmonil மாத்திரை பயன்படுத்த கூடாதவர்கள்:
- இரைப்பை நோய், கல்லீரல் நோய், இதய நோய், சிறுநீரக நோய், கண்ணில் அழுத்த நோய், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள், 6 மாதங்களுக்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள், ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி உள்ளவர்கள் ஸ்பாஸ்மோனில் மாத்திரை பயன்படுத்த கூடாது.
- மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஆதலால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மாத்திரையையும் நீங்களாகவே எடுத்து கொள்ள கூடாது.
மருந்தின் அளவு:
- Paracetamol – 500 MG
- Dicyclomine – Dicycloverine – 20 MG
இது போன்ற மருந்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
மருந்து |