முடி உதிர்வதை தடுக்க
பெண்களுக்கும், ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முடி உதிர்வு பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. முடி உதிர்வை நிறுத்துவதற்காக கடையில் விற்கும் ஷாம்பு மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதற்கான தீர்வு முழுமையாக கிடைத்திருக்காது. இந்த பதிவில் உங்களை இந்த ஹேர் பேக் தயார் செய்து அப்ளை செய்யுங்க அப்படின்னு சொல்ல போவதில்லை. அப்பறம் என்னவா இருக்கும் என்று யோசித்து கொண்டே முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
முடி உதிர்வது நிற்க:
முதலில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கழுத்தை இடது பக்கம் மற்றும் வலது என்று மாற்றி மாற்றி கழுத்தை மட்டும் திருப்பவும். அதன் பிறகு முழுவதுமாக கழுத்தை சுழற்றவும்.
உஸ்ட்ராசனம்:
முதலில் விரிப்பில் முட்டி போட்டு இரண்டு கைகளையும் இடுப்பு பகுதியில் வைத்து சுவாசத்தை வெளிவிட்டவாறே தலை பின்னோக்கி வளைக்கவும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறே சாதாரண நிலைக்கு வரவும்.
அடுத்து முட்டி நிலையிலே இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டவும். இடது கையால் எடுத்து களின் துதி காலை பிடிக்க வேண்டும், வலது கையால் வலது துதி காலை பிடிக்க வேண்டும். உடல் பகுதியையும், நெஞ்சு பகுதியையும் எவ்வளவு உயர்த்த முடியுமோ அந்த உயர்த்த வேண்டும். இந்த பயிற்சியை 3 அல்லது 5 முறை செய்யவும். இப்படி செய்வதினால் தலை பகுதி இரத்த ஓட்டம் சீராக செல்லும்.
முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க
Rabbit Pose Yoga:
வஜ்ராசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளும் கணுக்காலை பிடித்து கொண்டு உச்ச தலை பகுதியை தரையை தொட வேண்டும்.
இந்த யோகா செய்வதனால் தலை பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாக செல்லும்.
அர்த்த சிரசாசனம்:
வஜ்ராசனத்தில் அமர்ந்து முன்னோக்கி குனிந்து இரண்டு கைகளையும் கோர்த்து தரையில் வைத்து தலை பகுதியை தரையை தொட்டு கால் பகுதியை தரையில் வைத்து உடல் பகுதியை மேல் நோக்கி உயர்த்தவும்.
இந்த யோகா செய்வதால் முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். மேலும் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று ஆசனங்களை தொடர்ந்து செய்து வந்தாலே முடி உதிர்வை சரி செய்யலாம்.
இந்த யோகாவை மட்டும் செய்தால் காலத்திற்கும் உங்களுக்கு பாதவெடிப்பு வரவே வராது..!
மேலும் இதுபோன்ற யோகாசனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | யோகா |