கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகாசனம்..!

Advertisement

Karupai Irakkam Varamal Thadukka Yoga

பொதுவாக நாம் வாழும் இந்த அவசர உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவோ மாறிவிட்டது. இன்றைய நிலையில் சாப்பிட கூட நேரமில்லாமல் வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சத்தான உணவுகளை சாப்பிட்ட காலம் மாறி துரித உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். இதனால் யாருக்கு எப்போது என்ன நோய் வரும் என்று சொல்லவே முடியாது. ஆனால் எந்த நோயாக இருந்தாலும் அதை யோகா என்ற ஒன்றால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இதுவும் உண்மை தான். மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாததை கூட யோகா, உடற்பயிற்சிகள் செய்து குணப்படுத்த முடியும். அதுபோல நாம் தினமும் இந்த பதிவில் பல யோகாசனங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கருப்பை இறக்கம் வராமல் தடுக்கும் யோகாசனத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பக்கவாதம் வராமல் இருக்க இந்த யோகாசனத்தை செய்யுங்கள்

கருப்பை இறக்கம் வருவதற்கான காரணங்கள்:

உடல் பருமன் காரணமாக திசுக்களுக்கு ஏற்படும் சேதம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்பு, கடினமான பிரசவம், கனரக உபகரணங்களை தூக்குதல் மற்றும் நகர்த்துதல் ஆகியவை கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் இதை கீழ்காணும் உடற்பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம்.

உத்தானபாத ஆசனம்:

கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகா

  • முதலில் ஒரு விரிப்பில் விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் இரு கைகளையும் உடலோடு ஒட்டி, தரையில் படியும் படி வைத்துக்கொண்டு நீட்டிப் படுக்க வேண்டும்.
  • அடுத்து உங்கள் கால்களை மடக்காமல் அப்படியே தரைக்கு மேல் தூக்க வேண்டும்.
  • பின் மூச்சை இழுத்து 10 விநாடிகள் வைத்திருந்து பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும்.
  • இதையும் படியுங்கள்⇒ முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..  இதை ட்ரை பண்ணுங்க

பயன்கள்:

இதுபோல உத்தானபாத ஆசனம் செய்து வந்தால் கருப்பை இறக்கம் வராமல் தடுக்கலாம். உச்சி முதல் பாதம் வரை உள்ள நரம்புகள் நன்றாகத் தூண்டப்பட்டு சிறப்பாக இயங்கும். வாயு தொந்தரவு நீங்கும். அஜீரண கோளாறு ஏற்படுவதை தடுக்கும்.

நௌகாசனம்:

 கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகா

  • இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் விரிப்பில் படுத்து கொள்ளவும்.
  • பின் இரு கைகளையும் தலைக்கு பின்னால் வைத்து மூச்சை இழுத்து கொள்ளவும்.
  • அடுத்து கைகளையும் கால்களையும் உயர்த்த வேண்டும்.
  • அடுத்தபடியாக இரு கை விரல்களும் கால் விரல்களை நோக்கி இருக்க வேண்டும்.
  • பின் மூச்சை இழுத்து 10 வினாடிகள் வரை வைத்திருந்து பிறகு மூச்சை வெளிவிட்டு விரிப்பில் படுத்து கொள்ள வேண்டும்.

பயன்கள்:

இந்த ஆசனத்தை காலை மாலை என்று செய்து வந்தால் கர்ப்பப்பை இறக்கம் வராமல் தடுக்க முடியும். இதுபோல தினமும் செய்து வருவதால் நீரழிவு நோய் கட்டுப்படுகிறது. கிட்னி நன்றாக இயங்குகிறது. அதுபோல நுரையீரல், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இவை அனைத்தும் நன்றாக இயங்க செய்கிறது.

நரம்பு மண்டலம் பலம்பெற யோகாசனம்
ஞாபக சக்தியை அதிகரிக்க யோகாசனம்

 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement