Kidney Protecting Yoga in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அது நம் உடல் முழுவதும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதுபோல நம் உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஓன்று. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை வைத்து மட்டும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியாது. அதற்காக நாம் சில யோகாசனங்களையும் செய்ய வேண்டும். அது என்ன யோகாசனம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
பக்கவாதம் வராமல் இருக்க இந்த யோகாசனத்தை செய்யுங்கள்..! |
கிட்னியைப் பாதுகாக்கும் யோகா:
1. நௌகாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் விரிப்பில் படுத்து கொள்ளுங்கள். பின் இரு கைகளையும் தலைக்கு பின்னால் வைத்து மூச்சை இழுத்து கொள்ள வேண்டும். பின் கைகளையும் கால்களையும் உயர்த்த வேண்டும்.
அடுத்து இரு கை விரல்களும் கால் விரல்களை நோக்கி இருக்கட்டும்.
பின் மூச்சை இழுத்து 10 வினாடிகள் வரை வைத்திருந்து பிறகு மூச்சை வெளிவிட்டு விரிப்பில் படுத்து கொள்ள வேண்டும்.
பலன்கள்:
இதுபோல காலையிலும் மாலையிலும் 3 முறை செய்து வந்தால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இதுபோல தினமும் செய்து வருவதால் நீரழிவு நோய் கட்டுப்படுகிறது. கிட்னி நன்றாக இயங்குகிறது. அதுபோல நுரையீரல், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இவை அனைத்தும் நன்றாக இயங்க செய்கிறது.
இதையும் படியுங்கள்⇒ முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க
2. மூத்ராக்ஷய முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து முதுகெலும்பு நேராக இருக்கும் படி அமரவேண்டும். பின் கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
இதுபோல பத்து முறை செய்யுங்கள். பின் கண்களை திறந்து மோதிரவிரல் மற்றும் சுண்டு விரலை மடக்கி, உள்ளங்கையை தொடும்படி வைத்து மோதிரவிரல் மீது கட்டை விரலை வைக்க வேண்டும். அதுபோல ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்:
இதுபோல காலை மற்றும் மாலை என்று இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சிறுநீரக செயல் இழப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
நரம்பு மண்டலம் பலம்பெற யோகாசனம்..! |
3. சுப்த மச்சேந்திராசனம்:
முதலில் விரிப்பில் அமர்ந்து இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். பின் வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக இடதுபுறம் நீட்ட வேண்டும். பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும்.
அதே நேரத்தில் வலது கையை நேராக நீட்டி வைக்க வேண்டும். பின்பு தலையை வலது புறமாக சாய்க்க வேண்டும். இதே நிலையில் சில விநாடிகள் வரை இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு வந்து கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
பலன்கள்:
இதுபோல தினமும் 3 முதல் 5 முறை செய்து வருவதால் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்கிறது. அதனால் இந்த முத்திரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. சிறுநீரகப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்க யோகாசனம் ..! |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |