உயர் இரத்த அழுத்தம் குறைய யோகாசனம்
இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கைமுறை பலவகையான மாற்றத்தை எதிர்கொள்ளுகிறது. அதனால் நமக்கு பலவகையான சோதனைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வற்றையெல்லாம் நாம் சரி செய்வதற்குள் நமது பாடுபடத்தப்படகிவிடுகிறது. அதனால் நமக்கு பல மனஉளைச்சல் ஏற்படுகிறது. அவற்றால் நமக்கு பலவகையான உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றது. அப்படி ஏற்படும் பலவகையான உடல்நல குறைபாடுகளில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம். இதனால் நமது நமக்கு மேலும் சில உடல்நல குறைபாடுகள் ஏற்படுகிறது. அதனால் இதனை குறைப்பதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் குறிப்பிட்ட காலத்திற்கு தான் பலன் அளிக்கும். ஆனால் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை தொடர்ந்து செய்து உங்களின் உயர் இரத்த அழுத்தத்தை விரைவில் மற்றும் நிரந்தரமாக குறைத்து கொள்ளுங்கள்.
உடல் சூட்டை இப்படியெல்லாம் குறைக்க முடியுமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
Yoga for Hypertension in Tamil:
சிசு ஆசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும். அதன் பிறகு தரை விரிப்பில் முதலில் முட்டி போட்டு அமருங்கள். இருகால்களும் இணைந்தபடி இருக்கவேண்டும். இப்போது மெதுவாக உடலை கீழே குனியுங்கள். தொடை மீது உடல் இருக்கும்படி வளையுங்கள். நெற்றி தரையில் படும்படி வைத்து, கைகளை பக்கவாட்டில் தரையில் பதியுங்கள். இப்போது மார்பை தொடையில் அழுத்தவும். கைகளையும் தரையில் நன்றாக அழுத்தவும். இவ்வாறு செய்யும்போது முதுகுத் தண்டிலும் ஒரு அழுத்தம் உணர்வீர்கள். இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம். மேலும் இந்த யோகாசனத்தை செய்வதன் மூலம் கழுத்து மற்றும் முதுகு வலி குணமாகும்.
உடல் எடையை இப்படியெல்லாம் கூட குறைக்க முடியுமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
சவாசனம்:
- இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
- அதன் பிறகு தரை விரிப்பில் மல்லாந்து படுக்கவும். குதிகால்களை சேர்த்து வைத்து கால் விரல்களை அகற்றி வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கும்படி கைகளை மடக்காமல் பக்கவாட்டில் நீட்டி வைக்கவும்.
- தலை எந்தப் பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும். தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும். இடது வலது உடல் பாகம் சமமாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.
- மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும். கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள்.
- இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் மன அழுத்தங்கள் குறைந்து உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக குறைய தொடங்கி விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம். மேலும் இந்த யோகாசனத்தை செய்வதன் மூலம் உடலின் வலி அனைத்தும் குணமாகும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |