Yoga Poses for Heart Health in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! இன்றைய பதிவில் நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் உள்ளவர்கள் முதல் முதியவர் வரை அனைவருமே இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் நமது இதயம் நன்கு ஆரோக்கியத்துடனும், நல்ல பலத்துடனும் இல்லாததுதான். அதனால் நமது இதயத்தின் ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்த இந்த பதிவில் கூறியுள்ள யோகாசனங்களை செய்து பயன்பெறுங்கள்.
Yoga for the Heart in Tamil:
1. உத்திட்ட திரிகோணாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரைவிரிப்பில் நேராக நின்று கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கால்கள் இரண்டையும் சற்று அகற்றி வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களின் வலது பாதம் சற்று வெளிப்புறமாகவும், இடது பாதம் உள்புறமாகவும் இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு உங்களின் இடது கை உங்களின் இடது பாதத்தை பிடித்து கொள்ள வேண்டும் உங்களின் வலது கை உங்களின் தலைக்கு மேல் நீட்டி இருக்க வேண்டும். உங்களின் பார்வை உங்களின் வலது கையை நோக்கி இருக்கவேண்டும்.
இந்நிலையில் 5 – 10 வினாடிகள் நின்று பின்னர் கைகளை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த ஆசனத்தை தினமும் காலையும் மாலையும் 10 -15 நிமிடத்திற்கு செய்வதன் மூலம் உங்களின் இதயம் நன்கு பலம் பெரும்.
2. பச்சி மோட்டாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நேராக நீட்டியவாறு அமருங்கள். பின்னர் உங்களின் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே உங்களின் கைவிரல்களால் உங்களின் கால்களின் பாதத்தையோ அல்லது கால்களின் கட்டைவிரல்களை பிடித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களின் முட்டியை மடக்கக்கூடாது.
இந்த ஆசனத்தை தினமும் காலையும் மாலையும் 10 -15 நிமிடத்திற்கு செய்வதின் மூலம் உங்களின் இதயம் நன்கு பலம் பெரும்.
உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோகாசனம்
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |