தொடையில் உள்ள சதையை ஈசியா குறைக்கலாம்

Advertisement

Thigh Fat Reducing Exercise in Tamil

இன்றைய காலத்தில் உணவு முறை காரணமாக உடல் எடை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் போது நாளடைவில் உடல் பருமனை ஏற்படுத்துகிறது. சில நபர்கள் உடல் எடை அதிகமாக இருக்க மாட்டார்கள் ஆனால் தொடை பகுதியும், இடுப்பு பகுதியிலும் சதை அதிகமாக இருக்கும். இதனை நீங்கள் உணவின் மூலமாகவும் கட்டுப்படுத்த வேண்டும். மற்றொன்று உடல் பயிற்சிகளாலும் தொடை பகுதியின் சதையை குறைக்கலாம். வாங்க அது என்னென்ன உடற்பயிற்சிகள் என்று தெரிந்து கொள்ளவோம்.

Yoga For Thighs Fat:

பூரண தித்திலி ஆசனம்

தொடை சதையை குறைக்க யோகா

முதலில் விரிப்பில் உட்கார்ந்து காலை நீட்டி கொள்ளவும். கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்து இரு பாதத்தையும் ஒன்றாக இணைக்கவும். கைகள் இரண்டையும் பாதத்தை கோர்த்து பிடித்து கொள்ளவும். இந்த நிலையில் முதுகை நிமிர்த்தி சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே என்று 6 முறை செய்யவும். பிறகு நெற்றி பகுதியை பாதங்களில் வைத்து கொள்ளவும். இந்த நிலையில் 10 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடவும்.

இந்த ஆசனம் செய்வதால் தொடை பகுதிக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லும். தசை பகுதி பலம் பெரும். இந்த ஆசனத்தை கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் நேரத்தில் இருக்கும் பெண்கள், முதுகு தண்டு வடத்தில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்க வேண்டும். 

தொப்பை குறைய 15 வழிகள்..!

உட்கடாசனம்:

தொடை சதையை குறைக்க யோகா

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நேராக நின்று கொள்ளவும். அதன் பிறகு நாற்காலியில் எப்படி உட்காருவோமோ அதே போல் உட்கார்ந்து கால்களை மடக்கி பாதி அளவில் மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் நீட்டி ,சுவாசத்தைத் விடும் போது  கைகளை கீழே விடவும்.

இந்த ஆசனம் செய்ததால் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள தசைகளின்  கொழுப்பை குறைக்கவும்,   வலுப்படுத்தவும் உதவுகிறது.

நடராஜாசனம்:

தொடை சதையை குறைக்க யோகா

இந்த ஆசனம் செய்வதற்கு இடது காலை பின் பக்கம் வைத்து இடது கைகளால் இடது காலை பிடிக்க வேண்டும். வலது கையை முன் பக்கம் நீட்டவும். சில நிமிடங்களுக்கு சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடவும்.

தொடையில் உள்ள சதையை குறைப்பது எப்படி?

மேலும்  இதுபோன்ற யோகாசனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> யோகா 
Advertisement