அதிக டிமாண்ட் உள்ள சுயதொழில் – Suya Tholil in Tamil
சுயதொழில் என்ன செய்யலாம்:- வணக்கம் வாசகர்களே.. புதியதாக அதிலும் பேக்கிங் செய்வதற்கு துறையிலும் அதிக டிமாண்ட் உள்ள தொழிலை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். அதாவது பிளாஸ்ட்டிக் கவருக்கு எதிராக, பிளாஸ்ட்டிக் கவரை ஒழிக்கும் விதத்தில் பிரவுன் கவர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இந்த பிரவுன் கவர் கடைகளுக்கும் கண்டிப்பாக தேவைப்படும். குறிப்பாக மெடிக்கல் ஷாப்பில் மருந்து, மாத்திரைகளை பேக்கிங் செய்து கொடுக்கும் போது இந்த பிரவுன் கவரில் தான் பேக்கிங் செய்து கொடுப்பார்கள். இது தவிர துணி கடை, ஸ்டேஷனரி கடை, வளையல்மணி கடை இது போன்ற கடைகளில் கூட இந்த பிரவுன் கவர் அதிகளவு பயன்படுத்தப்டுகிறது. ஆக இதனை நாம் தயிர் செய்து விற்பனை செய்வதன் மூலம் தினமும் நல்ல வருமானத்தை பெறமுடியும். சரி வாங்க இந்த தொழில் எப்படி தொடங்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
சுயதொழில் என்ன செய்யலாம் | Suya Tholil in Tamil
இடம்:
இந்த தொழிலை நீங்கள் ஆரம்பத்தில் வீட்டில் இருந்தே செய்யலாம் இதற்கு பத்துக்கு பத்து இடம் இருந்தாலே போதும். தொழில் நல்ல அளவிற்கு வளரும் போது. இதற்கென்று தனியாக இடம் அமைத்து தொடங்கலாம்.
இயந்திரம்:
இந்த பிரவுன் கவர் தயார் செய்வதற்கு இயந்திரம் தேவைப்படும். இந்த இயந்திரத்தின் விலை 3.50 லட்சம் தேவைப்படும். இயந்திரத்தின் விலை அதிகமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டும். இது போன்ற தொழில் துவங்கவும் நபர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஆக நீங்கள் இயந்திரத்தை வாங்கி விட்டு அதன் பின் அதற்கான மானிய தொகையை நீங்கள் அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தில் சிறிய கவர் முதல் பெரிய கவர் வரை தயார் செய்திட முடியும்.
மூலப்பொருட்கள்:
இந்த பிரவுன் கவர் தயார் செய்வதற்கு Jumbo roll தான் அவசியம் தேவைப்படும். இந்த Jumbo roll பண்டில் 35 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கிடைக்கின்றது.
முதலீடு:
இயந்திரத்திற்கு 3.50 லட்சம். மூலப்பொருட்களை 10,000/-, இதர செலவுகளுக்கு 5,000/- என்று மொத்தமாக 3.65 லட்சம் தேவைப்படும்.
வருமானம்:
நீங்கள் வாங்கும் இயந்திரம் ஆடோமேடிக் இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தில் சிறிய வடிவில் உள்ள கவர் முதல் பெரிய வடிவில் உள்ள கவர் வரை தயார் செய்யலாம். அதேபோல் ஒரு நாளுக்கு 100k வரைக்கும் இந்த பிரவுன் கவர் தயார் செய்ய முடியும்.
கவரின் திக்னஸ் பொறுத்து ஒரு கிலோ பிரவுன் கவரி 300 GSM முதல் 800 GSM வரை தயார் செய்யலாம்.
ஆக இதன் மூலம் ஒரு நாளுக்கு 80,000/- பீஸ் பிரவுன் கவரை தயார் செய்யலாம்.
நீங்கள் தயார் செய்த பிரவுன் கவர் ஒரு கிலோவையே Wholesale-யில் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஆக இரு நாளுக்கு 40000 கவர் தயார் செய்து விற்பனை செய்தாலே உங்களுக்கு 16,000/- ரூபாய் வரை வருமானம் கிடைத்துவிடும்.
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த பிரவுன் கவரை மெடிக்கல் ஷாப், மளிகை கடை, துணிக்கடை, ஸ்டேஷனரி கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்மண்ட் ஸ்டோர், வளையமணி கடை, போக்கிரி போன்ற அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 அதிகமான டிமாண்ட் உள்ள தொழில், இந்த தொழிலை செய்தால் மாதம் 90,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |