தொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம் | District Industries Centre in Tamil

மாவட்ட தொழில் மையம் – District Industries Centre in Tamil

Mavatta Tholil Maiyam List in Tamil – வணக்கம் நண்பர்களே.. இப்போது எல்லாம் படித்த இளைஞர்கள் பல நிறுவனங்களுக்கு சென்று வேலை தேடி அலைவதை விட சொந்தமாக தொழில் துவங்கள் வேண்டும் என்று எண்ணம் அனைவரிடமும் வந்துவிட்டது. இருப்பினும் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அனைவரிடமும் பணம் வேண்டுமல்லவா. ஒரு செயலை செய்ய அவசியம் பணம் என்பது மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது, இதன் காரணமாகவே படித்த இளைஞர்களை தொழில் முனைவேராக மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டது தான் மாவட்ட தொழில் மையங்கள். இந்த மாவட்ட தொழில் மையம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கிறது. இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் ஏராளமானோர் நமது தமிழகத்தில் இருக்கின்றன. மேலும் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மிக முக்கிய காரணமே மாவட்ட தொழில் மையங்கள் தான்.

மேலும் படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய தொழில் பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது. மாவட்ட தொழில் மையம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

சரி இப்பொழுது ஒவ்வொரு மாவட்டங்களுக்கான மாவட்ட தொழில் மையம் அலுவகம் முகவரி (Mavatta Tholil Maiyam List in Tamil) கீழ் படித்தறியலாம் வாங்க.

சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி? Mudra Loan Details in Tamil..!

 மாவட்ட தொழில் மையம் முகவரி – Mavatta Tholil Maiyam List in Tamil

மாவட்ட தொழில் மையம் அரியலூர்:

பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
531/21, ஜெயங்கொண்டம் ரோடு,
வல்லஜாநகரம்,
அரியலூர். 621704
தொலைபேசி. 04329 – 228555, 228556

மாவட்ட தொழில் மையம் திருச்சி:

பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை
திருச்சிராப்பள்ளி- 620001
தொலைபேசி. 0431 – 2460823,2460331

மாவட்ட தொழில் மையம் மதுரை:

பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அழகர் கோவில் ரோடு, மதுரை.
தொலைபேசி எண்: 2537621

மாவட்ட தொழில் மையம் திருப்பூர்:

பொதுமேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
அவிநாசி சாலை,
அனுப்பர்பாளையம்
திருப்பூர் 641 652.
தொலைபேசி எண்: 2244007

மாவட்ட தொழில் மையம் தென்காசி:

மாவட்ட தொழில் மையம் @ திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம்:-

பொதுமேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
பாளையங்கோட்டை சாலை,
பைபாஸ் சாலை அருகில்
கோரம்பள்ளம்
தூத்துக்குடி 628 101.
தொலைபேசி எண்: 2340152,2340053

மாவட்ட தொழில் மையம் திண்டுக்கல்:

பொதுமேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
எஸ்.ஆர் மில்ஸ் சாலை,
சிட்கோ தொழிற் பேட்டை
திண்டுக்கல் 624 003.
தொலைபேசி எண்: 2470893,2471609

மாவட்ட தொழில் மையம் விழுப்புரம்:-

பொதுமேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம் விழுப்புரம் .,
தொலைபேசி எண்: 226602

மாவட்ட தொழில் மையம் சென்னை:-

மண்டல இணை இயக்குனர்,
தொழிற் பேட்டை,
கிண்டி,
சென்னை 32.
தொலைபேசி எண்: 22501620

மாவட்ட தொழில் மையம் தஞ்சாவூர்:

பொதுமேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
நாஞ்சிக்கோட்டை,
தஞ்சாவூர் 613 006.
தொலைபேசி எண்: 255318,230857

 

மேலும் மற்ற மாவட்டங்களின் அலுவலக முகவரியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Siru Tholil Ideas in Tamil 2021