Repacking Business Ideas in Tamil
Repacking Business-யில் பலவகையான Business இருக்கிறது. அவற்றில் நல்ல லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். அதாவது இப்பொழுது அனைவருக்கும் கருப்பு கவுனி அரிசியை பற்றி தெரிந்திருக்கும். இந்த கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய உதவி செய்கிறது. இந்த காரணமாக பல தங்கள் உணவு முறையில் கருப்பு கவுனி அரிசியை பரிந்துரைக்கின்றன. ஆக நாம் இந்த கருப்பு கவுனி அரிசியை மொத்தமாக வாங்கி அதனை நாம் மீண்டும் Repacking செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அது குறித்த தகவல்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். நீங்கள் ரிபேக்கிங் சார்ந்த தொழில் செய்ய விரும்புகிறீகள் என்ற இந்த தொழிலை செய்யலாம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம். இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதன் மூலம் எவ்வளவு வருமாம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இடம்:
இந்த ரிபேக்கிங் பிசினஸ் பொறுத்தவரை வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய பிசினஸ். இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை.
கருப்பு கவுனி அரிசியை பேக்கிங் செய்யும் முறை:
இந்த கருப்பு கவுனி அரிசியை 1 கிலோ, 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு மிகவும் முக்கியமான மூலப்பொருட்கள் கருப்பு கவுனி அரிசி தான். இந்த கருப்பு கவுனி அரிசியை மொத்தமாக 50 கிலோவிற்கு வாங்கிக்கொள்ளுங்கள். மொத்தமாக வாங்கும்போது தான் அரிசியின் ஒரு கிலோ விலை 100, சில்லறையாக வாங்கும்பொழுது அதன் விலை அதிகமாக தான் இருக்கும். ஆக அரிசியை மொத்தமாக 50 கிலோவிற்கு வாங்கிக்கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசியை பேக்கிங் செய்வதற்கு Hermetic Bag தேவைப்படும். இந்த றன்று பொருட்களும் அவசியம் தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு பொருள் போதும் தினமும் 2500 ரூபாய் சம்பாரிக்கலாம்..!
Shelf Life:
இந்த கருப்பு கவுனி அரிசி 12 மாதங்கள் வரை கெட்டு போகாது. அதாவது அரிசியில் பூச்சி பிடிப்பது, மக்கி போவது என்று இது போன்ற பிரச்சனைகள் இருக்காது.
தேவைப்படும் இயந்திரங்கள்:
- Weighing Scale
- Sealing Machine இவை இரண்டும் தேவைப்படும்.
முதலீடு:
குறைந்தது உங்களிடம் 10,000 ரூபாய் இருந்தாலே போதும். இந்த தொழிலை எளிதாக தொடங்கிவிடலாம்.
வருமானம்:
ஒரு கிளி கவுனி அரிசியின் விலை 100.
50 கிலோ கவுனி அரிசியின் விலை 5000 ரூபாய்.
சாதனமாக ஒரு கிலோ கவுனி அரிசியை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன.
நீங்கள் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்யும் பொழுது ஒரு கிலோ கவுனி அரிசியை 280 ரூபாய் விற்பனை செய்யலாம்.
50 கிலோவையும் விற்பனை செய்யும்பொழுது நமக்கு அதன் மூலம் 14000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
ஒரு மாதத்திற்கு 50 கிலோ கவுனி அரிசியை 5 முறை விற்பனை செய்தாலே உங்களுக்கு 70,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |