விவசாயம் சார்ந்த தொழில்கள்..! Agriculture Business Ideas in Tamil..!
வணக்கம் நண்பர்களே.. நல்ல வேலையில் இருப்பவர்களும், சொந்தமாக தொழில் செய்ப்பவர்கள் மட்டுமே இப்போது உள்ள காலகட்டத்தினை கடந்து செல்ல முடிகிறது. இதன் காரணமாக பட்டம் படித்த இளைஞர்கள் முதல் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டவர்கள் வரை சொந்தமாக தொழில் செய்ய வேண்டும், என்ற எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. இவர்களது எண்ணங்களை பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பலவகையான திட்டங்களை அமல்படுத்திக்கிறது. நீங்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்ய விரும்பும் நபரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். ஆம் இந்த பதிவில் விவசாயம் சார்ந்த 10 அருமையான தொழில்களை பட்டியலிட்டுளோம். அவை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.. சரி வாங்க டாப் 10 வரிசையில் விவசாயம் சார்ந்த தொழில்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.
விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள்..!
1 ஆடு வளர்ப்பு:
விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆடு வளர்ப்பும் ஒன்று. இந்த ஆடு வளர்ப்பு மூலம் நீங்கள் நிறைய லாபம் பெறமுடியும். ஆதாவது இறைச்சி கடைகளுக்கு ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யலாம். ஒரு ஆடு விற்பனை செய்யும் பொழுது நீங்கள் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை லாபம் பெற முடியும். மேலும் ஆட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இந்த தொழிலை செய்வதற்கு நிறைய ஆடுகளை வாங்க வேண்டும் என்ற ஒரு அவசியமும் இல்லை. ஆரம்பத்தில் 4 அல்லது 5 ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தாலே போதும். இதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். இருப்பினும் ஆடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
அரசு வழங்கும் 90% மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..!
2 தேனீ வளர்ப்பு:
தேனீ வளர்ப்பும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்று. இந்த தேனீ வளர்ப்பிற்கு நிறைய இடம் தேவைப்படாது. உங்கள் வீட்டிலேயே ஒரு சிறிய அறையில் தேனீக்களை வளர்த்து லாபம் பெறலாம். சுத்தமான தேன் வாங்கி பயன்படுத்த நிறைய மக்கள் விரும்புகின்றன ஆகவே தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் தேனினை சந்தைகளில் விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
3 காய்கறிகள் விற்பனை:
தங்களிடம் சொந்தமாக இடம் இருந்தால் அவற்றில் காய்கறிகளை பயிர் செய்து. அவற்றை விற்பனை செய்யலாம் அல்லது காய்கறி விவசாயம் செய்ப்பவர்களிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்யலாம். இதன் மூலம் லாபம் சம்பாதிக்கலாம்.
4 கோழி வளர்ப்பு:
கோழி வளர்ப்பு மூலமும் நிறைய பணம் சம்பாதிக்கலாம் எப்படி என்று கேக்குறீங்களா? நீங்கள் 10 கோழிகளை வாங்கி வளர்க்கும் பொழுது இரண்டு விதமாக நீங்கள் லாபம் பெற முடியும் அதாவது கோழி இடும் முட்டையினை விற்பனை செய்யலாம், மேலும் கோழிகளை இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்வதன் மூலமும் லாபம் பெறலாம். இருந்தாலும் கோழிகளையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
5 பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை:
இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் மாடுகள் இருக்க வேண்டும். மாடுகள் நிறைய இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரண்டு அல்லது மூன்று மாடுகள் இருந்தால் போது இந்த மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பாலினை விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.
இயற்கை உரங்கள் தயாரிப்பு:
மக்கள் இப்பொழுது இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றன. இந்த சூழ்நிலையில் நீங்கள் இயற்கை உரங்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் சந்தைகளில் நல்ல வருமானத்தை பெறமுடியும். மேலும் நீங்கள் இயற்கை உரங்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி? |
இயற்கை விவசாயம்:
இயற்கை விவசாயம் செய்து அதன் மூலம் கிடைத்த உணவு பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கையாக விவசாயம் செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க மக்கள் அதிகம் அருவம் காட்டுகின்றன. ஆகவே இந்த இயற்கை விவசாயம் செய்து உணவு பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் நல்ல வருமானம் பெறலாம்.
காளான் வளர்ப்பு:
நகரவாசிகள் பெரும்பாலும் அவர்களது உணவு முறைகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவு பொருள் தான் காளான். ஆகவே காளான் வளர்த்து விற்பனை செய்து லாபம் பெறலாம். இந்த தொழில் செய்ய தங்களிடம் குறைவான இடம் வசதி இருந்தால் போதும். தங்களது வீட்டில் இருந்தபடியே இந்த காளான் வளர்ப்பு தொழிலை செய்து நல்ல வருமானம் பெற முடியும்.
பூக்கள் வளர்ப்பு:
தங்களிடம் சொந்தமாக விவசாயம் நிலம் இருந்தால் அவற்றில் பலவகையான பூக்களை பயிர் செய்து விற்பனை செய்யலாம். ஒவ்வொரு ரக பூக்களுக்கு ஒவ்வொரு விதமான மதிப்பு சந்தையில் உள்ளது. ஆகவே பலவிதமான பூக்களை வளர்த்து நல்ல லாபம் பெறலாம்.
அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!! |
மீன் வளர்ப்பு:
இறுதியாக நாம் தெரிந்துகொள்ள இருக்கும் தொழில் தான் மீன் வளர்ப்பு. அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பொருள் தான் மீன். ஆகவே நீங்கள் மீன் வளர்ப்பு தொழிலை செய்து மீன்களை விற்பனை செய்யலாம். இந்த மீன் வளர்ப்பிலும் ஒவ்வொரு ரக மீன்களுக்கு ஒவ்வொரு விதமான விலை மதிப்பு உள்ளது. ஆகவே இந்த மீன் வளர்ப்பு தொழில் மூலமாகவும் நீங்கள் நல்ல வருமானம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil 2022 |