2,000 ரூபாய் முதலீட்டில் இரட்டிப்பு வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க..!

Advertisement

Best Income Business Ideas

இன்றைய காலத்தை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். அப்படி இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலவு போக மீதம் உள்ளவற்றை சேமித்து வருகின்றோம். இப்படி நாம் மாத சம்பளத்திற்கு வேலைக்கு மற்றவரிடம் செல்வதை விட சொந்தமாக சுயதொழில் செய்தோம் என்றால் வருமானம் மற்றும் லாபம் என இரண்டினையும் ஒன்றாக பெறலாம். அதுமட்டும் இல்லாமல் இதன் மூலம் வாழ்க்கையில் மேலும் நல்ல நிலைக்கு வந்து அதன் மூலம் 10 நபர்களுக்கு வேலை கொடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் வெறும் 2,000 ரூபாய் முதலீட்டில் 2 மடங்கு வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்:

 best income business ideas in tamil

இன்றைய காலத்தை பொறுத்தவரை அதிக டிமாண்ட் உள்ள தொழில்கள் நிறைய உள்ளன. அத்தகைய தொழில் ஏதாவது ஒன்றை மட்டும் செய்தால் போதும் அதிக லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் மிகவும் எளிமையாக பெற்று விடலாம்.

ஆகையால் இன்று அதிக டிமாண்ட் உள்ள தொழிலான Aloe Vera Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும்  இந்த அலோவேரில் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B6, மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் குளோரின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால் பெண்கள் பெரும்பாலும் இதனை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர் 

தேவைப்படும் முதலீடு:

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 2,000 ரூபாய் மட்டும் தேவையப்படும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

  1. கற்றாழை
  2. Carbomer- 1 கிராம் 
  3. கிளிசரின்- 4 மில்லி 
  4. சுடு தண்ணீர்- 90 மில்லி
  5. Propylene Glycol- 3 மில்லி 
  6. பேக்கிங் செய்ய பாட்டில் அல்லது கவர்

இந்த தொழிலை செய்வதற்கு கற்றாழை ஆனது மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

தேவைப்படும் இடம்:

உங்களுடைய  வீட்டில் வெறும் 10×10 மட்டும் இருந்தால் போதும். அந்த சின்ன இடத்திலேயே இந்த தொழிலை செய்து விடலாம்.

இதையும் படியுங்கள்⇒ காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்.. 

தொழில் தொடங்குவது எப்படி..?

 குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்

முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள அலோவேராவை சுத்தமாக அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லினை எடுத்து வைத்துள்ள கொள்ளுங்கள். நாம் எடுத்துவைத்துள்ள மூலப்பொருட்களுக்கு அலோவேரா ஜெல்லானது 100 கிராம் இருந்தால் போதும்.

அதன் பிறகு எடுத்து வைத்துள்ள அலோவேரா ஜெல்லினை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள Carbomer, கிளிசரின் மற்றும் DM water ஆகியவற்றினை ஒரு ஸ்பூனால் கலந்து கொள்ளுங்கள். ஒரு 5 நிமிடம் கழித்த பிறகு பாத்திரத்தில் உள்ள பொருளுடன் அலோவேரா ஜெல் 100 கிராம் சேர்த்து மீண்டும் ஒரு 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து இதனை 3 மணி நேரம் மூடி வைத்து விடுங்கள். அதன் பிறகு திறந்து பார்த்தால் அலோவேரா ஜெல் பாதி தயார் ஆகிவிடும்.

அதன் பிறகு பாத்திரத்தில் உள்ள ஜெல்லுடன் Propylene Glycol 3 மில்லி சேர்த்து நன்றாக 10 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து எடுத்து வைத்துள்ள சுடு தண்ணீரை பாத்திரத்தில் உள்ள ஜெல்லுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் போதும் அலோவேரா ஜெல் தயார்.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்து வைத்துள்ள அலோவேரா ஜெல்லினை 100 கிராம், 200 கிராம் மற்றும் 1/2 கிலோ என பாட்டில் அல்லது கவரில் பேக்கிங் செய்து வைத்துள்ள கொள்ளுங்கள்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

நீங்கள் பேக்கிங் செய்து வைத்துள்ள அலோவேரா ஜெல்லினை Department ஸ்டோர், ஷாப்பிங் மால், மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை மற்றும் பியூட்டி பார்லர் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா.  வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.  இது தெரியாம போச்சே.,

வருமானம்:

ஒரு 100 கிராம் அலோவேரா ஜெல்லின் விலை 110 ரூபாய் என்றும் 200 கிராம் 220 ரூபாய் என்றும் 1/ 2 கிலோ 555 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆகையால் ஒரு நாளைக்கு 5 பாக்கெட் என மூன்றிலும் விற்பனை செய்தால் கூட 4,425 ரூபாய் வருமானம் பெறலாம். இதனை போலவே நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு 1,32,750 ரூபாய் வருமானம் மற்றும் லாபம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement