வாங்கி விற்கும் இந்த தொழிலை செய்தால் போதும்..! உங்கள் கடையில் தான் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்..!

Advertisement

வாங்கி விற்கும் தொழில்

நாம் எப்போதும் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் போது முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும் என்று யோசிப்பதை விட என்ன தொழில் செய்வது என்று தான் நாம் அதிகமாக யோசிக்கிறோம். சரி இன்றைய காலத்தில் தான் இன்டர்நெட்டில் எல்லாம் தெரிகிறதே என்று அதில் என்ன தொழில் செய்வது என்று தெரிந்துக்கொண்டு செய்யலாம் என்று முடிவு செய்தாலும் கூட நமக்கு கொஞ்சம் யோசனையாக இருக்கும். ஆகவே உங்களுடைய தொழிலை தொடங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கான ஒரு பயனுள்ள தகவலை இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு நீங்களும் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை தொடங்கலாம். மேலும் அது என்ன தொழில் மற்றும் அதனை பற்றிய முழு விவரங்களையும் பதிவை முழுதாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க சிறுதொழில்:

முதலீடு இல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய Bangle Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது ஒரு போதும் குறையாமல் என்றும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வளையல் பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒரு தொழிலாக இருப்பதால் நீங்கள் நினைத்தை விட அதிகமாகவே லாபம் மற்றும் வருமானம் பெறலாம். 

நீங்கள் வளையல் வாங்குவதற்கு மட்டும் தான் கையில் இருந்து பணம் கொடுக்கும் படி இருக்கும். மற்ற படி எந்த மிஷினும் வாங்க வேண்டாம்.

தேவைப்படும் இடம்:

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு என்று உங்களுக்கு தனியாக கடையோ அல்லது பெரிய இடமோ தேவைப்படாத. வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் மட்டும் போதும்.

How to Start Bangle Business:

வாங்கி விற்கும் தொழில்

இந்த தொழிலை செய்வதற்கான வளையலை மொத்தமாக வளையல் தயாரிக்கும் இடத்தில் அல்லது வளையல் Wholesale ஷாப்பிலும் நிறம் மற்றும் தற்போதைய Trending-ற்கும் ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள்.

நீங்கள் வளையல் வாங்குவதற்கு முன்பு எந்த மாதிரியான வளையல் Business-ஐ தொடங்குவது மற்றும் எந்த வளையல் அளவு என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் வளையலில் நிறைய வகைகள் இருக்கிறது.

அதேபோல் Online மூலம் வளையல் விற்பனை செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

விற்பனை செய்யும் முறை:

Bangle Business-ஐ நீங்கள் மூன்று விதமாக செய்யலாம்.

  1. வளையல் தயாரிக்கும் இடத்தில் இருந்து நேரடியாக வாங்கி அதனை பேக்கிங் செய்து நிறைய Order எடுத்து அதன் மூலம் விற்பனை செய்யலாம்.
  2. Wholesale இடத்தில் வளையலை வாங்கி அதன் மூலம் நீங்கள் வியாபாரத்தை தொடங்கலாம்.
  3. இரண்டாவதாக Online மூலம் நீங்கள் விற்பனை செய்யலாம்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க சிறுதொழில்

பெரிய மற்றும் சிறிய வளையல் கடை, Fancy Store, Department Store, Beauty Parlour மற்றும் Wholesale Shop என நிறைய இடங்களில் விற்பனை செய்யலாம்.

நீங்கள் வளையல் விற்கும் அளவை பொறுத்து அதற்கு ஏற்றவாறு வருமானம் பெறலாம். ஏனென்றால் நீங்கள் எந்த வகையான வளையல் விற்பனை செய்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒருவருக்கான வலையாளின் விலை 100 ரூபாயில் இருந்து அதிகமாகி கொண்டே இருக்கிறது.

வியாபாரம் உங்களுக்கு அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்றவாறு வருமானம் மற்றும் லாபம் இரண்டும் அதிகரித்து கொண்டு தான் போகும். 

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை.! உங்களை தேடி வருவாங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement