Low Investment Business in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நமது வியாபார பதிவில் அருமையான பிசினஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பிசினஸ் யார்வேண்டுமானாலும் தொடங்கலாம். புதிதாக தொழில் தொடங்குபர்களுக்கு இந்த தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் அந்த தொழிலை எப்படி தொடங்குவது என்றும், இந்த தொழிலை தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடு என்றும் பார்க்கலாம் வாங்க.
வீட்டில் இருந்தபடியே தினமும் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம். அப்படி என்ன தொழிலாக இருக்கும்.! |
தேவைப்படும் இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு சிறியதாக இடம் இருந்தாலே போதுமானது, அதாவது 10 × 10 இடம் இருந்தாலே போதும் இந்த தொழிலை சிறப்பாக செய்யலாம். நாம் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் முதலில் குறைந்த அளவுதான் லாபம் பெறமுடியும். அந்த வியாபாரம் கொஞ்சம் நன்றாக வளர்ந்த பிறகுதான் அதிகமான முதலீடு கிடைக்கும். அந்தவகையில், தொழில் தொடங்கி நல்ல வளர்ச்சி வந்ததும் தனியாக ஒரு கடை அமைத்து தொழிலை தொடங்கலாம்.
Green Chili Powder Business in Tamil:
இன்னக்கி நம்ப பார்க்க போகிற தொழில் என்னவென்றால் எல்லாரும் அதிகமாக உபயோகப்படுத்த கூடிய Green Chili Powder தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த Green Chili Powder தேவைகள் அதிகமாகவே இருக்கிறது, இந்த Green Chili பவுடர்களை தயாரித்து நம்முடைய பிராண்ட் நேம் கொண்டு பல இடங்களுக்கு விற்பனை செய்வது பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.
இந்த Green Chili பவுடர்கள் உள்ளநாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகமாகவே விற்பனை செய்யபட்டது இருக்கிறது. அதோடு இவை பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு அதிகமாவே தேவைப்படுகிறது, அதோடு இந்த பச்சை மிளகாய் பவுடர் கொண்டு சாஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விற்பனை செய்யும் முறை:
இந்த பொருட்களை தயாரித்த பிறகு ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம், அப்படி இல்லையென்றால் மளிகை கடை, ஹோட்டல், டிபார்ட்மென்ட் ஸ்டோர் போன்ற கடைகளுக்கு விற்பனை செய்து வரலாம். எடுத்துக்காட்டாக , ஆன்லைனில் இதனுடைய விலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். 400 கிராம் Green Chili Powder 280 ரூபையாக இருக்கிறது. Snapdeal ஆப்பிள் இந்த Green Chili Powder 100 கிராம் 199 ரூபையாக விற்பனை செய்யப்படுகிறது.
தொழிலை தொடங்குவதற்கு தேவைப்படும் பொருட்கள்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு பச்சை மிளகாய் மட்டும் இருந்தால் போதும், இந்த பச்சைமிளகாய்களை மொத்த விலையில் சந்தைகளில் வாங்கிக்கொண்டு தயாரிக்கவேண்டும்.
முதலில் பச்சை மிளகாய்களை வாங்கிக்கொண்டு, அதை சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொண்டு காயவைத்து, அதை அரைக்க வேண்டும்.
இந்த பச்சை மிளகாய் தூள்களை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸி இருந்தாலே போதும் இந்த மசாலாவை தயாரிக்க. பச்சை மிளகாய் தூள்களை தயாரிக்க தெரியவில்லை என்றால் youtube மூலம் கற்றுக்கொண்டு தயாரிக்கலாம்.
பேக்கிங் செய்யும் முறை:
பச்சை மிளகாய் தூள்களை தயாரித்த பிறகு இதனை பேக்கிங் செய்வதற்கு உள்ள கவர்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொண்டு அதிலில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம் அல்லது உங்கள் பிராண்ட் நேமில் நீங்களே கவர்களை தயாரித்து பேக்கிங் செய்யலாம்.
தேவைப்படும் முதலீடு:
இந்த தொழிலை தொடங்குவதற்கு குறைந்தது 2000 ரூபாய் இருந்தாலே போதும், ஆனால் தினமும் 2000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும் ஒரு அருமையான தொழில். இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த தொழிலை தொடங்கி லாபம் அடையுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |