மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் சுயதொழில் செய்து நல்ல வருமானம் பெறுங்கள்..!
Best Small Business Ideas In Tamil..!
நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி..!
இன்றைய சூழ்நிலையில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரிகரித்து கொண்டே போவதினால் மொபைல் சம்பந்தமான எந்த தொழிலை செய்தாலும் நிச்சயமாக அதிக லாபம் பெறலாம்.
குறிப்பாக மொபைல் பொறுத்தவரை 30,000/- ரூபாய்க்கு மேல் வாங்கும் மொபைல் போனுக்கு மட்டுமே மொபைல் வாட்டர் ப்ரூஃப் வாரண்டி தருவார்கள் என்பதால் மொபைல் பயன்படுத்துபவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தன்னுடைய மொபைலை தண்ணீரில் போட்டுவிடுவோம்.
தண்ணீரில் போடுவதால் மொபைல் வீணாகிவிடும். எனவே நாம் மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் தொழில் செய்யலாம். இதன் மூலம் மாதம் நாம் நல்ல லாபம் பார்க்க முடியும்.
அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..! |
சரி வாங்க இந்த பகுதியில் மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் சுயதொழில் (Best Small Business Ideas In Tamil) பற்றி நாம் படித்தறிவோம் வாங்க..!
சுயதொழில் மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் செய்யும் முறை..!
- முதலில் மொபைலில் உள்ள சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை மொபைலை விட்டு வெளியில் எடுத்து விட வேண்டும்.
- பின் மொபைலை நன்கு துடைத்துவிட்டு, மிஷினுடன் கொடுக்கப்பட்ட வேக்கம் கிளீனரை கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
- பின்பு மொபைலின் அளவுக்கு தகுந்தாற்போல மிஷினுடன் வரும் பவுச்-ல் மொபைலை பொறுத்தி மிஷினில் உள் இணைக்க வேண்டும்.
- பின்னர் அதற்கான திரவத்தை சரியான அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். இறுதியில் மிஷினை மூடிவிட வேண்டும்.
- கோட்டிங் செய்வதற்கான வழிமுறை முடிந்தது.
- மிகவும் எளிமையான முறையில் குறுகிய நேரத்தில் இதனை செய்துவிட முடியும்.
சுயதொழில் – தேவையான முதலீடு:
மிஷின் விலை – ரூ.2,00,000/-
மிஷின் வாங்கும் போதே அதற்கான திரவம், பவுச் மற்றும் எவ்வாறு செய்வது என்பதனை விற்பனையாளரே கற்றுக் கொடுப்பார்கள்.
சுயதொழில் – கிடைக்கும் லாபம்:
பொதுவாக சந்தையில் நாம் கோட்டிங் செய்தால் ரூ,500 வரை வசூலிக்கிறார்கள்.
நாம் இதனை செய்து கொடுத்தால் நமக்கு லேபர் சார்ஜ், கரண்ட் பில் எல்லாம் சேர்த்து ரூ.100 வரை செலவாகும்.
நமக்கு ரூ.400 வருமானமாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 10 மொபைல் கோட்டிங் செய்தால் ரூ.4,000 வருமானம் கிடைக்கும்.
10 x 400 = 4,000
30 x 4000 = 1,20,000
இந்த சுயதொழில் மூலம் நாளொன்றுக்கு 4,000/- ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும். தன்னம்பிக்கையும், முயற்சியும் உள்ளவர்கள் இதில் நிச்சயம் வெற்றி பெறலாம். மொபைல் கடை, போட்டோ ஸ்டூடியோ, ஜெராக்ஸ் கடை வைத்து நடத்துபவர்களுக்கு இந்த தொழில் கூடுதல் கைகொடுக்கும்.
இயந்திரம் (Mobile Waterproof Machine):
இந்த Mobile Waterproof Making Machine அலிபாபா மற்றும் இந்தியாமார்ட் போன்ற வெப்சைட்டில் நாம் ஆடர் செய்தும் வாங்கலாம். இந்த இயந்திரங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு லிங்கையும் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..! |
இது போன்று தயாரிப்பு தொழில், சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | புதிதாக என்ன தொழில் செய்யலாம்..! |