முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஐந்து அருமையான தொழில்கள் | Zero Investment Business in Tamil

Without Investment Business in Tamil

முதலீடு இல்லாமல் வருமானம் | Without Investment Business in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம். வருமானம் வாழ்க்கையில் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கு நாம் செய்யாத முயற்சிகளே கிடையாது. அப்படிப்பட்ட வருமானத்தை எப்படி நாம் எந்த ஒரு முதலீடு இல்லாமல் சம்பாதிப்பது என்பதற்கான ஐந்து தொழில்களின் பட்டியல்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க | Zero Investment Business in Tamil

Affiliate Marketing – முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க:

Without Investment Business in Tamil

  • இந்த தொழில் ஒரு பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங். ஒரு நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் போது அதனை உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்றால் அதற்கான ஒரு பங்கு (கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும். இந்த தொழிலை நீங்கள் Amazon, Flipkart போன்றவற்றில் செய்யலாம்.
  • Affiliate Marketing தொடங்குவதற்கு அதில் ஜாயின் செய்ய வேண்டும், பின் ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அதனை Whatsapp, Facebook, Instagram போன்றவற்றில் விளம்பரம் (promote) செய்ய வேண்டும்.
  • நீங்கள் எந்த மாதிரியான பொருளை தேர்வு செய்து விற்பனை செய்கிறீர்களோ அதை பொறுத்து நீங்கள் இந்த தொழிலில் லாபம் பார்க்கலாம்.

இன்சூரன்ஸ் அட்வைசர் – முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க:

முதலீடு இல்லாமல் வருமானம்

  • முதலீடு இல்லாத தொழில்: இன்றைய சூழலில் அனைவருக்கும் பயன்படுவது இன்சூரன்ஸ். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு, அதை பற்றிய தகவல்கள் தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு காப்பீடு (Insurance) பற்றி விளக்கி அவர்களை Insurance போட வைக்க வேண்டும்.
  • இந்த காப்பீடை போட வைப்பவர்களுக்கு அந்த கம்பெனியில் இருந்து பங்கு கிடைக்கும். இந்த வேலையை நீங்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தொடங்கலாம்.
  • இந்த வேலையை செய்வதற்கு நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். IRDA தேர்வு எழுத வேண்டும் இந்த தேர்வில் 50 கேள்விகள் கேட்கப்படும் அதில் நீங்கள் 20 கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க வேண்டும்.
அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள்

டிஜிட்டல் ரியல் எஸ்டேட் – Business Ideas in Tamil Without Investment:

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க

  • No Investment Business in Tamil: Digital Real Estate என்பது உங்கள் ஊரில் சில இடங்கள் விற்பதற்காக இருக்கும். அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் நான் உங்களுக்கு இந்த இடத்தை விற்று தருகிறேன் என்று கூறி, அந்த இடத்தின் புகைப்படங்களை Whatsapp, Facebook, Instagram போன்றவற்றில் பதிவிட்டு அதன் மூலமாக வாடிக்கையளர்களை உருவாக்கி அதன் மூலம் விற்க வேண்டும்.
  • டிஜிட்டல் ரியல் எஸ்டேட் மூலம் இடத்தின் சொந்தக்காரரிடமிருந்தும், வாடிக்கையாளர்களிடமிருந்தும் உங்களுக்கு பங்கு (கமிஷன்) கிடைக்கும்.

நெட்வொர்க் மார்க்கெட்டிங் – முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க:

முதலீட்டு இல்லாமல் ஆன்லைன் பணம் சம்பாதிக்க எப்படி

  • முதலீடு இல்லாமல் வருமானம்: ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுவது தான் Network Marketing. இந்த வேலையை செய்வதற்கு Amway, Tupperware போன்ற கம்பெனிகளை தொடர்பு கொள்ளலாம்.
  • இந்த வேலையை செய்வதற்கு முன் நீங்கள் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பின் அந்த குழுவிற்கென ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கவும். Team Leader கம்பெனியை அணுகி அவர்களிடம் இருந்து பொருளை வாங்கி வர வேண்டும்.
  • பின் அந்த பொருளை குழுவில் உள்ள அனைவரும் தனித்தனியாக குடும்பத்தில் உள்ளவர்களிடம், நண்பர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் பொருள்களை விற்பனை செய்தவுடன் அந்த நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கான பங்கு (கமிஷன்) கிடைக்கும்.

டிஜிட்டல் கோச்சிங் – Zero Investment Business in Tamil:

முதலீடு இல்லாமல் வருமானம்

  • Zero Investment Business in Tamilnadu: இப்பொழுது அனைத்தும் டிஜிட்டல் மையமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் எடுக்கப்படுகின்றன.
  • இதை பயன்படுத்தி தங்களுக்கு தெரிந்த தியான பயிற்சி, Jim Coaching, Coding Class போன்ற வகுப்புகளை Zoom meeting மூலமாகவோ, Whatsapp Group Create செய்து அதன் மூலமாகவோ எடுக்கலாம்.
  • உங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கியும் இந்த வேலையை செய்யலாம் அல்லது Vedantu, udemy, WhiteHat Jr போன்ற வலைத்தளத்திலும் செய்யலாம்.
கைவினை தொழில் ஐடியாக்கள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022