வீட்டில் இருந்தபடியே செய்யும் கை தொழில்..!
வணக்கம் தோழர்களே.. தோழிகளே.. இந்த பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு சுயதொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது நேந்திரம் பழத்தினை நன்கு உலர்த்தி அதனை பொடி செய்து விற்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். நேந்திரம் பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பலவகையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. குறிப்ப தாய்மார்கள் அவர்களது செல்ல குழந்தைக்கு ஊட்டச்சத்தினை அதிகரிக்க இந்த நேந்திரம் பழம் பொடியை வாங்கி கஞ்சியாக செய்து கொடுக்கின்ற. ஆகவே நாம் வீட்டில் இருந்தபடியே இந்த நேந்திரம் பழம் பொடியை தயார் செய்து சந்தைகளில் விற்பனை செய்வதன் மூலம் லாபம் பெறமுடியும். ஆகவே இந்த தொழிலை வீட்டில் இருந்தபடி எப்படி செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் லாபம் எப்படி இருக்கும் போன்ற தகவல்களை படித்தறியலாம் வாங்க.
இடம்:
இந்த தயரிப்பு தொழிலை நீங்கள் வீட்டில் இருதபடியே தங்களது ஓய்வு நேரங்களில் செய்து வரலாம். இதற்கென்று தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது. ஆனால் நீங்கள் பெரிய அளவில் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாள் அப்போது வேண்டுமானால் தனியாக இடம் அமைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும் மூலப்பொருட்கள்:
இந்த தயாரிப்பு தொழிலுக்கு அவசியம் தேவைப்படும் மூலப்பொருள் எதுவென்றால் நேந்திரம் பழம் தான். இந்த நேந்திரம் பழம் கேரளாவில் விளையக்கூடியது. அதன் அதன் பிறகு நீங்கள் தயார் செய்த நேந்திரம் பழம் பொடியினை பேக்கிங் செய்து சந்தைப்படுத்துவதற்கு ziplock cover வாங்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் போதும்
தயாரிக்கும் முறை:
- இரண்டு கைகளிலும் நல்லெண்ணெயைத் தடவி கொள்ளுங்கள். விரல்கள் இடுக்கிலும் உள்ளங்கை மற்றும் பின்புறத்திலும் தடவ வேண்டும்.
- நல்லெண்ணெய் தடவாவிட்டால் கைகளில் கருப்பாக கறையாகிவிடும்.
- இப்போது நேந்திரங்காயின் தோலைக் கத்தியால் அறிந்து நீக்கி விடவேண்டும்.
- வெறும் உள்ளிருக்கும் சதையை, சீவலில் வைத்து சிப்ஸ் போல மெல்லிசாக சீவி கொள்ளுங்கள்.
- சீவிய நேந்திரங்காயை வெள்ளைத் துணியில் பரப்பி 2-3 நாட்களுக்கு வெயிலில் வைத்து நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.
- காய்ந்தவற்றை எடுத்து உலர்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- அவ்வளவுதான்… நேந்திரப் பழப்பொடி தயார். இதனை பேக்கிங் செய்து சந்தைகளில் விற்பனை செய்யலாம்.
சந்தை வாய்ப்பு:
பெருபாலும் இந்த raw banana powder உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் தேவைப்படும். அதேபோல் பேக்கரிகளில் கேக் செய்வதற்கு இந்த பவுடர் அதிகளவு தேவைப்படுகிறது. மேலும் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க இந்த பவுடர் பயன்படுகிறது. ஆகவே சந்தையில் இதன் தேவை அதிகமாவே இருக்கிறது.
நீங்கள் முறையாக பேகிங்க் செய்த raw banana powder-ஐ ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம். அதேபோல் social media-வில் நீங்கள் தெரியப்படுத்தலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் இந்த நேந்திரம் பழம் பொடி குறைந்த பட்சம் 150 ரூபாய் முதல் அதிகபட்சம் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் செல்லர் அக்கௌன்ட் கிரியேட் செய்து நீங்கள் தயார் செய்த இந்த பவுடரை விற்பனை செய்யலாம்.
அவசியம் தேவைப்படும் ஆவணங்கள்:
இது உணவு சார்த்த பொருள் என்பதால் அவசியம் சில ஆவணங்கள் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி கீழ் காண்போம் வாங்க.
- FSSAI certificate
- GST certificate
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil 2022 |