இந்த தொழிலை நீங்கள் செய்தால் போதும்..! யாராக இருந்தாலும் உங்களுடைய கடையினை தேடி வருவார்கள் அப்படி என்ன தொழில் தெரியுமா அது..!

coconut oil business plan in tamil

வீட்டில் இருந்து சம்பாதிக்க… என்ன செய்யலாம்

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்தே என்ன தொழில் செய்யலாம் என்று தான் யோசிப்பார்கள். ஏனென்றால் இந்த மாதிரியான தொழிலை செய்வதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. அதே சமயம் சின்ன சுயதொழிலாக இருந்தாலும் அதில் நிறைய லாபம் பெறலாம் என்று தான் யோசிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலுக்கு அழிவு என்பதே கிடையாது. ஏனென்றால் நாம் எப்போது இதனை பயன்படுத்துவதை நிறுத்துகிறோமோ அப்போது தான் இதனுடைய டிமாண்ட் என்பது குறையும். ஆகவே இத்தனை நன்மைகளை கொண்ட இந்த தொழிலை எப்படி செய்வது என்பது பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்:

வீட்டில் தேங்காய் எண்ணெய் செய்வது எப்படி

முடியின் வளர்ச்சியியை அதிகரித்தல், பாக்டீரியாவின் பண்பினை எதிர்த்தல், தோலில் ஏற்படும் அலர்ஜியினை சரி செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் என பல விஷங்களுக்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் தொழிலை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

மேலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது அதிகமாகி கொண்டே போகிறது. ஆகையால் நீங்களும் இந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் சேர்த்து பெறலாம்.

தேவையான முதலீடு:

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 80,000 ரூபாய் தேவைப்படும்.

தேவையான மூலப்பொருள்:

  • தேங்காய்
  • Automatic Oil Machine
  • பாட்டிகள் அல்லது கவர்கள்- அளவிற்கு ஏற்றவாறு

Automatic Oil Machine-ன் ஆரம்ப விலை 60,000 ரூபாயாகும். இந்த மிஷினின் விலை என்பது அதனுடைய மாடலை பொறுத்து முற்றிலும் வேறுபாடும்.

மேலும் இந்த தொழிலை செய்வதற்கு FSSAI License, GST Registration, Agmark Certificate மற்றும் Trade License போன்ற ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே. 

தொழில் தொடங்குவது எப்படி..?

தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி

முதலில் புதிய அல்லது கொஞ்சம் பழைய தேங்காயினை வாங்கி கொள்ளுங்கள். ஆனால் அழுகிய தேங்காயினை பயன்படுத்த கூடாது. அதன் பின்பு வாங்கி வைத்துள்ள தேங்காயில் இருக்கும் தூசியினை நீக்கி விட்டு 5 நாட்கள் வரை தொடர்ச்சியாக காய வைய்யுங்கள்.

5 நாட்கள் கழித்த பிறகு தேங்காயின் மேலே இருக்கும் ஓட்டினை நீக்கி விட்டு மீண்டும் 5 நாட்கள் வெயிலில் காய வைய்யுங்கள். தேங்காய் வெயிலில் நன்றாக காய்ந்ததால் எண்ணெய் சுத்தமாகவும் மற்றும் தரமானதாகவும் கிடைக்கும்.

ஆகையால் தேங்காயினை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது காய வைத்துள்ள தேங்காயினை Automatic Oil Machine-ல் போட்டு தேங்காய் எண்ணெய் தயாரித்து விடலாம்.

பேக்கிங் செய்தல்:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயினை 100 மில்லி, 1/2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் என பாட்டில் அல்லது பாக்கெட்டுகளில் எண்ணெயினை நிரப்பி பேக்கிங் செய்து கொல்லுங்கள்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

தயார் செய்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயினை பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், ஷாப்பிங் மால், சிறிய மற்றும் பெரிய ஹோட்டல் ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம். ஹோட்டலில் சாப்பாடு செய்வதற்கு சில நேரம் தேங்காய் எண்ணெயினை உபயோகப்படுத்துவார்கள் அதனால் அங்கையும் விற்பனை செய்யலாம்.

வருமானம்: 

100 மில்லி தேங்காய் எண்ணெயின் விலை 20 ரூபாய் என்று விற்பனை செய்ய படுகிறது. அப்படி என்றால் 1 லிட்டர் தோராயமாக 200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் மொத்தமாக 20 லிட்டர் விற்பனை செய்தால் தோராயமாக 4,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 28,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ கடையை வைத்து நீங்கள் மிக்சியில் மட்டும் பொருட்களை போட்டு அரைத்து கொடுத்தால் போதும் வருமானம் சும்மா அள்ளும்.. 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil