தினசரி 4000 சம்பாதிக்கலாம்.. Coconut Sugar தயாரிப்பு தொழில்..!

Coconut Sugar Making Business in Tamil

Coconut Sugar Making Business in Tamil

சொந்தமாக தொழில் தொடங்குவது என்பது அனைவரது விருப்பமாக இருக்கிறது. இருந்தாலும் சொந்தமாக தொழில் தொடங்க அதிக பணம் தேவைப்படும் என்ற ஒரு காரணத்தினால் பலர் அவர்களுக்கு விருப்பம் இல்லாத பணிகளை செய்கின்றன. ஆனால் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் தொழிலுக்கு அதிக முதலீடு தேவைப்படாது. அதிலும் இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். முற்றிலும் புதுமையான தொழில்.. குறிப்பாக யாரும் அதிகம் செய்யாத தொழில்.. மக்களிடமும் அதிக வரவேற்பு இருக்கிறது. அப்படி என்ன தொழில் என்றால் Coconut Sugar தயார் செய்து அல்லது மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய கூடிய தொழிலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இடம்:

இந்த Coconut Sugar தயார் செய்ய உங்களுக்கு தனியாக இடம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை தொடங்கலாம்.

மூலப்பொருள்:

இந்த Coconut Sugar தயார் செய்வதற்கு தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் இருந்து தான் இந்த Coconut Sugar தயாரிக்கப்படுகிறது. ஆக உங்களுக்கு தேவையான அளவு பதநீர் வாங்கிக்கொள்ளுங்கள். மேலும் இதற்கு சில பாத்திரம் பண்டங்கள் வாங்க வேண்டியதாக இருக்கு. உங்கள் வீட்டில் இருந்தாலும் அதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 மணிநேரம் வேலை செய்தால் போதும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

தயாரிக்கும் முறை – Coconut Sugar Making Business in Tamil:

கரும்பில் இருந்து எப்படி சர்க்கரை தயாரிக்கப்படுகிறதோ.. அதே முறைதான் இதற்கும் பின் பற்ற வேண்டும். உங்களுக்கு தெளிவாக அதன் செய்முறை தெரிய வேண்டும் என்றால். YouTube-யில் இதற்காக நிறைய வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது அதனை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெளிவாக புரியும்.

அதாவது வாங்கிய பதநீரை வடிகட்டி ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்றாக சூடுபடுத்தி கிளற வேண்டும். நன்கு கெட்டியானதும் அதனை ஆறவைத்து பவுடர் போல் தயார் செய்ய வேண்டும். பிறகு சிறு சிறு பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

வருமானம்:

30 லிட்டர் பதநீரில் 8 கிலோ Coconut Sugar தயார் செய்யலாம். 200 கிராம் Coconut Sugar கடைகளில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ Coconut Sugar-ஐ 800 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். மொத்தமாக விற்பனை செய்யும்போது ஒரு கிலோ Coconut Sugar-ஐ 700 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் நமக்கு ஒரு கிலோவிற்கே 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுவே ஒரு நாளுக்கு 8 கிலோ தயார் செய்து விற்பனை செய்தோம் என்றால் 4000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

முதலீடு:

இந்த Coconut Sugar-ஐ ஒரு கிலோ தயார் செய்வதற்கு 200 ரூபாய் தான் செலவாகும். நீங்கள் எதனை கிலோ தயார் செய்ய உள்ளீர்களோ அதற்கு ஏற்றது போல் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த தேங்காய் சக்கரையை மளிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர், சோசியல் மீடியா போன்றவற்றை விற்பனை செய்யலாம் இதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

பயன்கள்:

Coconut Sugar-யில் நிறைய வைட்டமின்கள், மினரல்ஸ் சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை நாம் வெள்ளை சக்கரைக்கு பதில் பயன்படுத்தினால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த ஒன்றாக சொல்லப்படுகிறது.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil