பணம் கொட்டும் சிறந்த 10 Delivery Franchise Business

Advertisement

Delivery Franchise Business In Tamil

இப்போல்லாம் எல்லாருக்குமே சுயமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும், யாருடைய கைகளை நம்பியும் பணிபுரிய கூடாது என்ற எண்ணம் வந்து விட்டது. அவர்களுக்கு உதவு வகையில் நமது பொதுநலம்.காம் பதிவில் நிறைய தொழில் சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சிறந்த 10 Delivery Franchise Business ஐடியாக்களை பற்றித்தான் பகிர்த்துள்ளோம். விநியோகம் சார்ந்த Franchise Business-ஐ செய்ய விரும்பும் நபர் நீங்கள் என்றால்.

உங்களுக்கு மிகவும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க சிறந்த 10 Delivery Franchise Business-ஐ பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ஃபிரான்சைஸ் தொழில் – Ekart Franchise:

ekart franchise

இந்த Ekart Delivery Business-ஐ 2007-ஆம் ஆண்டு பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி மக்களுக்கு மேல் டெலிவரி செய்து வருகின்றன. இந்த Ekart நிறுவனத்துடன் நீங்கள் Franchise Business செய்யணும்னு விரும்புகின்றிர்கள் என்றால் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டியவை என்னென்ன.. என்றால்

இந்த Business செய்வதற்கு 4000 சதுர அடி கொண்ட இடம் உங்களிடம் இருக்க வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை நீங்கள் Deposit செய்ய வேண்டியதாக இருக்கும்.

மேலும் உங்களிடம் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். இதனுடன் ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்ற அடிப்படை சாதனங்கள் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த Ekart நிறுவனத்துடன் அவ்வளவு எளிதாக உரிமை (Franchise) பெற முடியாது. உங்களுக்கு லக்கு இருக்குன்னா ட்ரை செய்து பாருங்கள்.


Blue Dart Franchise

Blue Dart Franchise

இந்த Blue Dart என்பது 1983-யில் மும்பையில் ஆரம்பித்த ஒரு விநியோக நிறுவனம் ஆகும். 2008-யில் DHL என்ற நிறுவனம் முக்கிய பங்குதாரராக ஆனார்கள். அதுக்கு அப்பறம் இந்த நிறுவனம் முதல்மையான Franchise நிறுவனமாக மாறியது.

Blue Dart நிறுவனத்தை பொறுத்தவரை இந்த உலகத்தில் முக்கால்வாசி இடங்களில் டெலிவரி செய்துகொண்டு இருக்கின்றன.

இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise எடுக்க வேண்டும் என்றால் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். இந்த DHL நிறுவனத்துடனும் அவ்வளவு எளிதாக உரிமை (Franchise) பெற முடியாது.


Xpressbees Courier Franchise:

Xpressbees Courier Franchise

இந்த Xpressbees Courier Franchise 2015-யில் பூனேவில் ஆரம்பித்த ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் டெலிவரி செய்து வருகின்றன. இந்த நிறுவனத்துடன் Franchise எடுப்பதற்கு முழுமையான தகவல்கள் இல்லை. இருந்தாலும் இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் contact form என்று ஒரு ஆப்சன் இருக்கு அதன் மூலமாக உங்களை தகவல்களை உள்ளிடுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு Franchise கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


Gati KWE Franchise:

Gati KWE Franchise

Gati KWE நிறுவனம் இந்தியாவில் டெலிவரி தொழிலை செய்து வருகின்றன. இது மட்டும் இல்லாமலா 140 நாடுகளுக்கும் இவர்களுடைய விநியோக சேவைகளும் இருக்கிறதாம். இந்த நிறுவனம் மூன்று வகையான Franchise வாய்ப்புகளை வழங்குகின்றன. அதாவது Booking center, Pickup and delivery model, Booking center with four wheeler ஆகிய மூன்று வாய்ப்புகளை வழங்குகிறது.

Booking center வைப்பதற்கு உங்களுக்கு குறைந்தது 50 சதுர அடி கொண்ட இடம் இருந்தால் போதும். Booking center பொறுத்தவரைக்கும் நீங்க வெறும் புத்தகத்தை மட்டும் தான் ஆர்டர் எடுப்பிங்க.

Pickup and delivery model வைத்து நடத்துவதற்கு உங்களிடம் four wheeler இருக்க வேண்டும் மற்றும் Pickup and delivery நீங்க தான் பண்ற மாதிரி இருக்கும்.

மூன்றாவதாக உள்ள ஆப்சன் தான் Booking center with four wheeler இந்த ஆப்ஷனை பொறுத்தவரை நீங்கள் புத்தகத்தையும் டெலிவரி செய்யலாம் அதே போல் Pickup and drop இவை இரண்டையுமே நீங்கள் செய்ய முடியும். இந்த ஆப்ஷனில் உங்களுக்கு எந்த ஆப்சன் பிடிக்கிறதோ அவரை நீங்கள் Franchise Business-ஆக செய்யலாம்.

இருந்தாலும் Gati KWE நிறுவனத்துடன் Franchise பெறுவதற்கு ஒரு விதி முறையை வைத்திருக்கின்றன அது என்ன வென்றால் இந்த தொழில் பற்றி உங்களுக்கு முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும். உங்களுக்கு முன்னனுபவம் இருந்துச்சின்னா இந்த நிறுவனத்துடன் இணைத்து Franchise தொழிலை செய்யலாம்.


DTDC Franchise

DTDC Franchise

இந்த DTDC என்பதன் முழு விரிவாக்கம் Desk to Desk Courier & Cargo ஆகும். பெங்களூரில் இருக்கின்ற ஒரு நிறுவனம் ஆகும். இந்த DTDC கம்பெனி 1990-யில் ஆரம்பித்த கம்பெனி ஆகும். இந்த நிறுவனமும் இந்தியாவில் பல இடங்களில் டெலிவரி தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனமும் நான்கு வகையான Franchise வாய்ப்புகளை வழங்குகின்றன அவை..

Unit Type of Franchise, DTDC Master Franchise,  DTDC Super Franchise & DTDC Corporate Franchisee என வகையான Franchise ஆப்ஷன்ஸ் இருக்கு இவற்றில் உங்களுக்கு என்ன வகை பிடித்திருக்கிறதோ அவற்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.


Inxpress Franchise:

inxpress franchise

இந்த Inxpress கம்பெனி இங்கிலாந்தில் 1999-யில் ஆரம்பித்த ஒரு கம்பெனி ஆகும். இதுவே கொரியர் சர்விஸ் தொழிலை உலகம் முழுவதும் செய்து வருகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் எப்பொழுது அடி எடுத்து வைத்து என்றால் 2013-ஆம் ஆண்டு தான். இந்த நிறுவனம் தற்பொழுது 13 நாடுகளில் டெலிவரி செய்து வருகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்றுமதி தொழிலை செய்து வருகிறதாம். இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் ஒரு மொபைல் போன் மற்றும் லேப்டாப் இருந்தால் போதும். Inxpress கம்பெனியுடன் franchise எடுக்குறது மிகவும் எளிமைதான், இருந்தாலும் இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise தொழில் செய்வதற்கு 9 லட்சம் தேவைப்படும்.


Delhivery Franchise:

delhivery franchise

இந்த Delhivery Franchise 2011-யில் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக 2050 நகரங்களுக்கு மேல டெலிவரி செஞ்சிகிட்டு இருக்காங்க. இந்த Delhivery Franchise நிறுவனமும் இரண்டு வகையான Franchise வச்சிருக்காங்க. அவற்றில் உங்களுக்கு எந்த வகை பிடிச்சிருக்கிறதோ அவற்றை தேர்வு செய்துகொள்ளுங்கள். இருப்பினும் உங்களிடம் டெலிவரி செய்வதற்கான அடிப்படை சாதனங்களான கணினி, இன்டர்நெட், மொபைல் போன், பிரிண்டர் போன்ற சாதனங்கள் இருக்க வேண்டும்.


Shadowfax Courier Franchise:

shadowfax courier franchise

இந்த Shadowfax Courier நிறுவனம் 2015-ஆம் ஆண்டில் தான் ஆரம்பிச்சிருக்காங்க. இந்த நிறுவும் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு டெலிவரி செய்து வருகின்றன. ஆகவே இன்னும் நிறைய இடங்களில் இந்த நிறுவனம் Franchise தொழிலை செய்ய இருப்பதால், கண்டிப்பாக இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise உரிமை பெறமுடியும்.

நீங்கள் இவர்களுடன் Franchise எடுத்து பண்ணனும்னா உங்களிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் என்னென்ன என்றால்.. உங்களிடம் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். இதனுடன் ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்ற அடிப்படை சாதனங்கள் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


Amazon Delivery Franchise Business in Tamil: 

amazon delivery franchise

Amazon உடன் Delivery Franchise பிசினெஸ் செய்ய விரும்புறீங்களா.. அப்படி என்றால் அமேசான் நிறுவனம் இரண்டு வகையான Franchise வாய்ப்புகளை வழங்குகிறது. அதாவது ஒன்று டெலிவரி சர்விஸ் மற்றொன்று கொரியர் சர்விஸ். இவற்றில் உங்களுக்கு எந்த Franchise பிடிக்கிறதோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும் Amazon நிறுவனத்தில் Franchise உரிமை மிக எளிதாக வாங்கிவிட முடியும்.  இருந்தாலும் உங்களிடம் 400 சதுர அடி கொண்ட இடம் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். மேலும் வேலையாட்கள் 2 முதல் 5 நபர் வரை தேவைப்படும்.

POST Office Delivery Franchise Business in Tamil: 

post office franchise

அஞ்சல் அலுவலகத்தில் Franchise எடுத்து நீங்களே ஒரு அஞ்சலகம் போல் செயல்படுத்தலாம் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது. இந்தியாவில் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சலகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. POST Office Franchise-யில் அப்படி என்ன பண்ண முடியும் என்று யோசிப்பீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கடை வச்சிருக்கீங்கனு வைச்சிப்போம் நீங்கள் அஞ்சல் நிலையத்தில் ஏஜெண்டுகளாக இருந்து தபால் தலை உள்பட அனைத்து அஞ்சலக பொருட்களையும் கிராமப்புறங்களில் விற்பனை செய்யும் உரிமையையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அஞ்சல் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உங்களு விருப்பம் இருந்தால் அஞ்சல் அலுவலகத்துடன் இணைத்து Franchise தொழிலை செய்யுங்கள்.

அவ்வளவு தாங்க 10 சிறந்த Delivery Franchise Business இதுல உங்களுக்கு எந்த Franchise Business பிடிச்சிருக்கோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள் நன்றி வணக்கம்..

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement