Dry Grapes Business
சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். தினமும் இந்த பதிவின் மூலம் சிறந்த தொழில்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம். அப்படி என்ன தொழில் என்று தானே யோசிக்கிறீர்கள். குறைத்த முதலீட்டில் அதிக லாபம் தர கூடிய சிறந்த தொழில் தான் இது. இந்த தொழில் செய்வதற்கு முதலீடு எவ்வளவு, மூலப்பொருட்கள் மற்றும் இந்த தொழில் தொடங்குவதற்கான யோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Dry Grapes Business in Tamil:
சொந்தமாக ஒரு நல்ல தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழிலை வீட்டில் இருக்கும் பெண்கள் கூட தொடங்கலாம். இந்த தொழில் செய்வதற்கு 1 கிலோ திராட்சை இருந்தாலே போதும். உலர் திராட்சைக்கு இன்று Demand அதிகம் இருப்பதால் இந்த தொழிலை தொடங்கி தினமும் நல்ல வருமானத்தை சம்பாதிக்கலாம்.
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு பழங்களை உலர வைக்கும் இயந்திரம் தேவைப்படும். அதன் விலை 3000 ரூபாயில் இருந்து இருக்கிறது. பின் 1 கிலோ திராட்சையின் விலை இவை அனைத்தையும் சேர்த்து 5000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். இந்த Dried Fruits Machine ஆன்லைனில் கிடைக்கிறது. அதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்.
இந்த பொங்கலுக்கு இந்த தொழிலை செய்தால் 2 நாட்களில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும்..! |
மூலப்பொருட்கள்:
- Dried Fruits Machine – 1
- திராட்சை – 1 கிலோ
இடம்:
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடமெல்லாம் தேவையில்லை. உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
உலர் திராட்சை செய்யும் முறை:
1 கிலோ அல்லது உங்களுக்கு தேவையான அளவு திராட்சையை கடையில் இருந்து வாங்கி வாருங்கள். பின் அதை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் திராட்சை ஊறவைக்க தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பின் அதில் 1 பின்ச் அளவுக்கு சுண்ணாம்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த நீரில் நாம் கழுவி வைத்துள்ள திராட்சையை போட்டு 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். இப்படி ஊறவைப்பதால் கடைகளில் கிடைக்கும் உலர் திராட்சை போல நமக்கு கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்
பின் அதை பழங்களை உலர வைக்கும் இயந்திரத்தில் வைத்து 2 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். இந்த இயந்திரத்தில் 7 கிலோ வரை பழங்களை உலர வைக்கலாம்.
2 நாட்களுக்கு பிறகு அதை எடுத்து பார்த்தால் கடைகளில் கிடைக்கும் உலர் திராட்சை போல் நமக்கு கிடைக்கும். இந்த திராட்சையை நீங்கள் பாக்கெட் செய்து உங்கள் பகுதிகளில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்து வரலாம்.
வருமானம் எவ்வளவு:
இந்த உலர் திராட்சை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதால் இதை கட்டாயம் மக்கள் வாங்குவார்கள்.
மார்க்கெட்டில் 1 கிலோ உலர் திராட்சை 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 10 கிலோ விற்றால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தொழிலை இன்றே தொடங்கி நல்ல வருமானத்தை பெறுங்கள்.இந்த வருடம் இந்த தொழில்களை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |