குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பெற்று தரும் முட்டை ஓடு பவுடர் விற்பனை

Eggshell Business Ideas in Tamil

முட்டை ஓடு பவுடர் கொண்டு ஒரு அருமையான தொழில் | Egg Shell Powder Business Tamil

Egg Shell Powder Business Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Eggshell தொழில் அதிக முதலீடு இல்லாமல் எளிமையான முறையில் தொடங்குவது எப்படி என்பதையும், அதற்கு தேவையான மூலப்பொருள் எப்படி பெறுவது என்பதை பற்றிய முழு விளக்கத்தையும் இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. இந்த பதிவு அதிக முதலீடு செலுத்தாமல் குறைவான முதலீடு வைத்து தொழில் தொடங்க நினைப்பவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க முட்டை ஓடு வணிக யோசனையை பற்றி பார்க்கலாம்.

Egg shell powder uses in tamil:

 • இந்த முட்டை ஓடுகள் கால்சியம் மாத்திரையை தயார் செய்வதற்கு, முகத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில், முடிக்கு பயன்படுத்தும் Shampoo மற்றும் தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தபட்டு வருகிறது.

Egg shell powder uses in tamil:

 • இது போன்ற பல தயாரிப்புகளுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதால் இதற்கான விற்பனை மதிப்பு எப்பொழுதும் குறையாமல் இருக்கிறது.
 • விற்பனை மதிப்பு குறையாமல் இருப்பதால் இந்த தொழிலை தொடங்குவதால் லாபம் அதிகமாக கிடைக்கும்.

மூலப்பொருள் கிடைப்பதற்கான வழிகள்:

 • இந்த முட்டை ஓடுகளை நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் Bakery Shop-ல் வாங்கி கொள்ளலாம். ஏனெனில் கேக் தயாரிப்பதற்கு அதிக முட்டைகள் Bakery Shop-ல் பயன்படுத்தபடும்.
 • உணவகங்கள் (Restaurant Shop), உங்கள் உறவினர்களிடம் இருந்து முட்டை ஓடுகளை வாங்கி கொள்ளலாம் மற்றும் உங்களிடம் இருக்கும் முட்டை ஓடுகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
 • ஆன்லைன் ஷாப்பிங்கிலும் இது மாதிரியான முட்டை ஓடுகள் விற்கப்படுகின்றன. ஆன்லைனில் 1-டன் முட்டை ஓட்டிற்கு Rs.15,000/- முதல் Rs.25,000/– வரை பணம் தேவைப்படும்.

Egg Shell Powder தயாரிக்கும் முறை – Egg Shell Powder Business Tamil: 

Egg Shell Powder

 • நீங்கள் Collect செய்த முட்டை ஓடுகளை தண்ணீரில் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைக்கும்பொழுது அதன் மேல் ஒரு படலம் போல் இருக்கும் அதனை நீக்கிவிடவும். இந்த முட்டை ஓடுகளை கொதிக்க வைப்பதன் மூலம் அதன் மேல் இருக்கும் கிருமிகள் நீக்கப்பட்டுவிடும்.
 • பத்து நிமிடம் கழித்து கொதிக்க வைத்த முட்டை ஓடுகளை உலர வைக்க வேண்டும். வெயிலில் உலர வைக்கலாம் அல்லது ஓவனில் 225 fahrenheit-ல் 20 நிமிடம் உலர வைக்கலாம்
 • உலர வைத்த பின்னர் அந்த முட்டை ஓடுகளை பவுடர் ஆக்க வேண்டும். இதை நீங்கள் உங்களிடம் இருக்கும் மிக்ஸியை பயன்படுத்தி கொள்ளலாம். முட்டை ஓடுகளை நன்றாக அரைத்து பவுடர் ஆக்கி கொள்ளவும்.
 • (இதை பவுடர் ஆக்குவதற்கு தேவையான மெஷின்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கின்றன. அந்த மெஷினை வாங்கியும் பயன்படுத்தி கொள்ளலாம்)
 • இந்த பவுடரை உலர வைத்து பின்னர் Bottel அல்லது ziplock cover அல்லது Paper bag-ல் பேக் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்து விடலாம்.

முட்டை ஓடு பவுடர் வாங்குபவர்கள் – முட்டை ஓடு பவுடர் விற்பனை:

 • இதை நீங்கள் Agriculture Farming, தோட்டத்திற்கு (Gardening), Nursery Shop போன்ற இடத்தில் உங்களது பொருளை விற்பனை செய்து கொள்ளலாம்.
 • நாமக்கல் மாவட்டத்தில் இந்த முட்டை ஓடு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

லாபம் – Muttai Odu Business in Tamil:

 • கடைகளில் 1kg Eggshell Powder Rs.599/- ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.
 • நீங்கள் 1kg Eggshell Powder Rs.500/-  ரூபாய்க்கு விற்பனை செய்தால் நல்ல லாபத்தை பெறலாம். இதற்கான லாபம் நீங்கள் தயார் செய்யும் Eggshell Powder மற்றும் உங்களின் விற்பனை திறன் இதை பொறுத்தே அமையும்.
டீலர்ஷிப் எடுப்பது எப்படி
ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி?

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil